பாஜகவிலிருந்து தாவிய நடிகை கெளதமி.. விருதுநகரில் போட்டியிடுவாரா.. அதிமுகவின் பிளான் என்ன?

Feb 15, 2024,08:37 PM IST

சென்னை:  நடிகை கெளதமி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அவரை தன் பக்கம் இழுத்ததன் பின்னணி குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.


ஆந்திராவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகை கெளதி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். குரு சிஷ்யன்தான் அவரது முதல் படம். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கெளதமி பின்னர் அரசியலில் தீவிரமாக இறங்கினார். பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.




கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட மிகவும் ஆர்வமாக இருந்தார். அந்த்த தொகுதியில் களப் பணியெல்லாம் கூட ஆற்றி வந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார். தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்.


இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜகவை விட்டு விலகினார். அழகப்பன் என்பவர் தன்னிடம் நில மோசடி செய்து விட்டதாகவும், அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவாக இருப்பதாகவும் கூறி அவர் அறிக்கை விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸிலும் அவர் புகார் அளித்தார்.  அதன் பேரில் தற்போது அழகப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர்.


இந்த நிலையில் நேற்று திடீரென அதிமுகவில் இணைந்து விட்டார் கெளதமி. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்தது குறித்து கெளதமி கூறுகையில், நீண்ட காலமாகவே நான் அம்மாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அவர் மீது நிறைய மரியாதையும், பாசமும் அன்பும் வைத்துள்ளேன். அதை விளக்க வார்த்தைகள்  கிடையாது. அதிமுகவில் இணைந்தது திடீர் திட்டம் என்று சொல்வதை விட இந்த பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் கெளதமி.




தேர்தல் சமயத்தில் கட்சியில் சேர்ந்துள்ளதால் கெளதமி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அப்படி அவர் ஒருவேளை போட்டியிடுவதாக இருந்தால் விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. விருதுநகர் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியில்தான் அவர் போட்டியிட முன்பு ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அவரை நிறுத்த அதிமக முடிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து கெளதமி கூறுகையில், அதையெல்லம் போகப் போகப் பார்க்கலாம் என்று மட்டுமே கூறினார். ஆனால் கெளதமியை வைத்து அதிமுக ஏதாவது பிளான் செய்திருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. கெளதமி வார்த்தையில் சொல்வதானால், போகப் போகப் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்