திரையில் சாதித்ததை தரையில் சாதிப்பாரா விஜய்.. காத்திருக்கும் சவால்கள்.. தடைகளைக் கடந்தால் வெற்றிதான்

Aug 23, 2024,05:06 PM IST

- அஸ்வின்


அனைவரும் சொல்வதை இவர் செய்து கொண்டே வருகிறார். செய்து காட்டி வருகிறார். பிப்ரவரி மாதம் தனது கட்சி பெயரை தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்த நடிகர் விஜய் தற்போது கட்சியின் கொடியை அறிவித்துவிட்டார். ஒரு கோலாகலமான அறிவிப்பு. கட்சி கொடிக்கு ஒரு பாடலையும் அறிவித்து விட்டார்கள். ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஒரு எளிமையை விஜய்யிடம் பார்க்க முடிகிறது. அதாவது பந்தாவாக சில பேர் சொல்லுவார்கள், மக்களுக்கு அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும். மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்வதை அனைவரும் சொல்லிக் காட்டியபடியே இருப்பார்கள். ஆனால் இவர் சொல்வதை மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டி வருகிறார்.




ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் மக்களோடு மக்களோடு அமர்ந்து, அந்தப் போராட்டத்தை ஆதரித்தார். தேவையான போது மக்களுக்காக குரல் கொடுக்க தவறியதில்லை. இந்த மாதிரி அனைத்து நிகழ்வுகளையும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். நிகழ்வுகளை சொல்வது அவரது புகழை நாம் உயர்த்தி பேசுவது போலாகி விடும். எனவே நிகழ்வுகளை சுருக்கி விட்டு அவர் செயல்பாடுகளை நாம் உன்னிப்பாக கவனித்தோம் என்றால், அவரது நோக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இவர் Man of words அல்ல, மாறாக  man of action. அதாவது சொல்வதை விட செய்வதையே விரும்புபவர் விஜய்.


அவரது வாழ்க்கையை "திரையில்.. தரையில்" என்று குறிப்பிட விரும்புகிறேன். திரையில் அவர் பேசிய வசனம் அனைத்தும் தீபாவளிதான்..  அவர் ரசிகர்களுக்கு என்றும் சரவெடி. அது திரையில். ஆனால் மக்களிடம்.. அதாவது அவர் தரையில் இனிமேல் என்ன செய்யப் போகிறார். தரையில் என்று நான் குறிப்பிடுவது அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் எல்லாமே இனிமேல் அவர் செயலில் காட்டப் போகிறார். எல்லாருக்குமே  குறிப்பாக பிரபலங்களுக்கு பொதுவாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் ஒரு யோசனை இருக்கும். நாம் இதை சொல்லனுமா, இதை சொன்னால் பின்விளைவுகள் என்ன வரும். நாம் இதை அணுகணுமா, இதை அணுகினால் பின் விளைவுகள் என்ன வரும் என்று எல்லாரும் யோசிப்பார்கள். ஆனால் இவர் சற்றும் யோசிக்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து விடுகிறார். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசி விடுகிறார்.




திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் அவர் படத்தைப் பற்றி அதிகம் ரசிகர்களிடம் பகிர்வதை விட நல்ல பல கருத்துக்களை அழகாக பகிர்வார். Ignore the Negativity அப்படி அவர் சொல்வது பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன் ஆகியுள்ளது. நாம் ரசித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ரசிப்பு தன்மையை உள்ளே வைத்துவிட்டு மக்களோடு இருந்து பார்த்தால் அவர் செய்வது எல்லாம் நன்றுதான். இப்போது  அரசியல்வாதியாக விஜய்க்கு நிறைய சவால்கள் உள்ளன.


அவர் மக்கள் ஓட்டை பெற வேண்டும் என்றால் மக்களிடம் அதிகமாக நெருங்கிப் பழக வேண்டும். நெருங்கி பழகினால் தான் மக்களுக்கு அவரைப் பற்றி தெரியும், அவரது கொள்கை என்ன, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய முடியும். அவர் மீது நம்பிக்கை வரும்.. ஒரு தலைவராக அப்போதுதான் அவர் உருவாக முடியும். இதெல்லாம் நடக்கும்போதுதான் அவரது கட்சிக்கும் அவரது கொடிக்கும் அவரது சின்னத்திற்கும் ஓட்டு போடுவார்கள்.


கொடி வந்துவிடலாம், சின்னம் வாங்கிவிடலாம். மக்களின் வாக்கை அவர் எப்படி சம்பாதிக்க போகிறார் என்பதுதான் அவருக்கு மக்கள் கொடுக்கும் சவால். அந்த சவாலை அவர் எப்படி சாதித்துக் காட்டப் போகிறார் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதையும் அவர் சர்வ சாதாரணமாக கடந்து விடுவார் என்றால் அதை எப்படி அவர் தக்க வைக்க போகிறார் என்பது அடுத்த சவாலாக இருக்கும். வெற்றி அவருக்கு மட்டுமில்ல யாருக்கும் ஈஸியா கிடைச்சுராது. வெற்றி என்றது மிகப்பெரிய கோல்ட். அந்த கோல்ட் வேண்டுமென்றால் அவர் மட்டும் இல்லை எல்லாருமே மெனக்கிடனும்.


விஜய் இன்னும் அதிகமா மெனக்கெட்டா தான், மக்களோட வாக்குகளை அவர் வாங்க முடியும். ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் ஏற்கனவே அவர் சம்பாதித்து விட்டார். அடுத்து  மக்களோட அன்பை எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக உள்ளது. ஏன்னா அவர் படத்தில் எல்லாமே பண்ணிட்டார், எல்லாம் செஞ்சிட்டார். ஆனா நடைமுறை வாழ்க்கையில், பிராக்டிகலா என் செய்ய போறாரு. எப்படி பிரச்சாரம் பண்ண போறாரு. எப்படி மாநாடுகளை நடத்தப் போகிறார்.. அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.




மக்கள் விவாதிப்பார்கள், சில கருத்தை சிலாகிப்பார்கள். சில கருத்தை பொறுமையாக பேசுவார்கள். இதை அனைத்தையும் அவர் சமாளிக்க வேண்டும். அனைத்தையும் அவர் சாமர்த்தியமாக மேற்கொள்ள வேண்டும். சமயோசிதமாக அவர் நடந்து கொள்ள வேண்டும். பல சூத்திரங்களை அவர் கையாள வேண்டும். இது அனைத்தையும் அவர் செய்தால்தான் அவர் நினைத்ததை அவர் அடைய முடியும். 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து களம் இறங்கியுள்ளார் விஜய். நினைத்தது எல்லாத்தையும் அவர் அடைய வேண்டும் என்றால் மக்களின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதைச் செய்து விட்டால் வெற்றிதான். வாகை மலர்க் கொடியுடன் வந்துள்ள விஜய், வெற்றிவாகை சூடுவாரா என்பதை அறிய... அவரது பாணியில் சொல்வதானால்.. We are waiting!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்