"ஹய்யா ஜாலி.. சூப்பர் லன்ச்".. உருளைக்கிழங்கு மூட்டையை எடுத்துச் சென்ற யானை!

Oct 25, 2023,03:21 PM IST

ஈரோடு :இயற்கை நமக்கு அளித்த அற்புதக் கொடை காடுகள் தான். மனிதன் உட்பட பல கோடி உயிரினங்கள் காடுகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர்.  ஆனால் காடுகளை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.


மனிதன் தன் சுயநலத்திற்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், காடுகளை அழித்து நாடாக்குகிறான். இதனால் அங்கு வாழும் உயிரினங்கள் அங்கிருந்து இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. காடுகளில் மரங்கள் அழிக்கப்படுவதாலும், தொழிற்சாலை மயமாகி வருவதாலும் விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது .




காடுகளை நம்பி வாழ்கின்ற பல்லுயிர் ஜீவன்கள் உணவின்றி தவிக்கின்றன. உணவு தேடி வெளியேறுகின்றன. வழியில் குறுக்கிடும் மனிதர்களுக்கும் இதனால் பாதிப்பு வருகிறது.  உணவுப் பொருட்களைத் தேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி விலங்குகள் வர இதுதான் காரணம். இப்படித்தான் ஒரு சம்பவம் ஈரோடு அருகே நடந்துள்ளது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள்  உள்ளது. இந்த மலையை சுற்றியுள்ள கிராமங்களில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் விளைவிக்கின்றனர். தினமும் அறுவடை செய்யும் பொருட்களை மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு பகுதிக்கு சரக்கு வாகனம் மூலம் கொண்டு செல்வது வழக்கம் .


இந்நிலையில் நேற்று காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வேன் திம்பம் மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது உணவு தேடி காடுகளை விட்டு வெளியே வந்த காட்டு யானை ஒன்று திடீரென சரக்கு வேனை வழிமறித்தது. வாகன ஓட்டுனர் எப்படியாவது இந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்து, யானையைத் தாண்டி வாகனத்தை சாலை ஓரமாக ஓட்டிச் சென்றார்.


"ஏம்ப்பா தம்பி.. நான் ஒரு "பெரிய" மனுஷன்.. நான் எவ்வளவு பெரிய உருவம்.. அதை மதிக்காமல் நீ தப்பிச்சுருவியா.. என்னையே நீ ஏமாற்றி சொல்வாயா" என்பதுபோல தனது தும்பிக்கையால் வாகனத்தை தடுத்து நிறுத்தியது யானை. அதற்கு மேல் வாகனம் தப்ப முடியுமா.. நின்று விட்டது.. பிறகென்ன வாகனத்தின் மேலே உள்ள உருளைக்கிழங்கு மூட்டையை தன் துதிக்கையால் லாவகமாக இழுத்து கீழே தள்ளியது யானை. ஆஹா.. நமக்கு இன்று நல்ல உணவு கிடைத்தது என்று மகிழ்ச்சியாக அந்த மூட்டையை எடுத்துச் சென்றது. 


யானையின் இந்த உருளை வேட்டையால் அந்த சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

யானை காட்டுக்குள் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.


காடுகள் செழிப்பாக இருந்தால்தான் நாம் செழிப்பாக இருக்க முடியும் . நாம் காடுகளை அழித்து, அங்கு வாழும் உயிரினங்களுக்கு இடையூறு செய்தால் இப்படித்தான் அவை வெளியே வரும்.. உருளைக்கிழங்கு மட்டுமல்ல.. நாளை நாம் சாப்பிடும் எல்லாவற்றிலும் வந்து பங்கு கேட்கும்.. !

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்