ஏன் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்? .. இதுதாங்க காரணம்!

Jan 09, 2023,12:11 PM IST

சென்னை: வீடாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி பூஜைக்கும் பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமானது கற்பூரம். பூஜைகள் முடிந்த பிறகு நிறைவாக கற்பூர ஆரத்தி காட்டப்படுவது தான் வழக்கம். ஆனால் தற்போது கரிப்பிடிக்கிறது என்கிற காரணத்தால் வீடுகளிலும் சரி, கோவில்களிலும் சரி கற்பூரம் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக தீபம் மட்டுமே கோவில்களில் காட்டப்படுகிறது.


ஆனால் கற்பூரம் காட்டுவதற்கு சிறப்பான ஒரு காரணம் உண்டு. இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உணர்த்துவதற்காக மட்டுமல்ல, கற்பூர ஜோதி ஏற்றப்படும் போது எப்படி கருவறையில் இருக்கும் இருள் விலகி, தெய்வத்தின் திருமுகத்தை தெளிவாக நாம் தரிசனம் செய்ய முடிகிறதோ, அதே போல் நமது மனதில் இருக்கும் அஞ்ஞானம் என்ற இருள் நீங்கி, நமக்குள் இறைவன் இருப்பதை உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


கற்பூரத்தில் இருந்து வரும் வாசம் தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது. இது நம்முடைய ஆன்மாவிற்கும் விருப்பமான வாசமும் கூட தான். கற்பூரத்தின் வாசத்தை நுகர்ந்ததும் நமக்குள் ஒரு அமைதி, புதிய ஒரு உணர்வு ஏற்படுவதை நம்மால் உணர முடியும். இந்த தெய்வீக உணர்வு நம்மக்குள் சென்று, நேர்மறையான சக்திகள் நமக்குள் அதிகரிக்க வேண்டும் என்பதால் தான் பூஜையில் கற்பூரம் ஏற்றப்படுகிறது.


கோவிலில் நாம் பூஜைக்காக எடுத்துச் செல்லும் பொருட்கள் அனைத்தையும் அர்ச்சகரிடம் அப்படியே கொடுத்து விடுவோம். அப்படி அவர் அர்ச்சனை செய்வதற்காக கருவறைக்குள் கொண்டு செல்லும் பொருட்களில் பூ, பழம், தேங்காய் என அனைத்தும் மீண்டும் நம்மிடமே பிரசாதமாக கொடுத்து விடுவார்கள். ஆனால் கற்பூரம் மட்டும் திரும்பி வராது. அது இறைவனின் சன்னதியில் ஜோதியாக ஏற்றப்பட்டு, அப்படியே முழுவதுமாக கரைந்து போய் விடும். 


கற்பூரம் ஏற்றும் போதும் சாம்பலோ, துகளோ எதுவும் மிச்சம் இருக்காது. அந்த கற்பூரத்தின் கடைசி துகள் இருக்கும் வரை ஜோதி எரியும், பிறகு தானாக அணைந்து விடும். அப்படி இறைவனுடன் நாமும் பக்தியில் கரைந்து, அவனுடன் ஒன்றாக கலந்து, அவனுடன் கலக்க வேண்டும். வேறு எந்த வடிவத்திற்கு மாறி மீண்டும் பிறவா நிலையை அடைய வேண்டும். "இனி ஒரு பிறவி எனக்கு வேண்டாம். என்னை உன்னிடமே வைத்துக் கொள்" என மனம் முழுவதுமாக இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற நோக்கத்தை உணர்த்துவதே கற்பூரம் ஏற்றப்படுவதன் நோக்கம் ஆகும்.

சமீபத்திய செய்திகள்

news

Happy Deepavali: பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள்.. பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்.. தமிழ்நாடு அரசு

news

தீபாவளி கொண்டாடும் மக்களே.. இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. வானிலை மையம்

news

விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.. நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.. தவெகவினர் உற்சாகம்!

news

கமல்ஹாசன் விடுத்த அழைப்பு.. உதயநிதியோடு சென்று.. அமரன் படம் பார்த்த .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தீபாவளி திருநாளையொட்டி.. அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி.. புதிய உலக சாதனை!

news

அக்டோபர் 31 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கும்ப ராசிக்காரர்களே... உயரத்தை எட்டி பிடிக்கும் நாள்.. ரிஷபம் கொஞ்சம் பொறுமை தேவை!

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

அதிகம் பார்க்கும் செய்திகள்