- முனைவர் சி. பவானி இளங்கோவன்
ஒரு விரிவுரையாளராக 35 ஆண்டுகள் வரலாறு போதித்த அனுபவத்தில் மட்டுமல்லாமல் நமது வேர்களை அறியும் ஆர்வமும்
நன்றியும் அது பற்றிய தேடலும் உள்ள ஒரு வரலாற்று மாணவியாக என் வாழ்நாள் கனவாக ஒருதடவையாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா சென்றுவர வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டிருந்தேன்.
மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் என்ற அளவில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய வரலாற்றினை அறிந்து வைத்துக் கொள்வதும் தேர்வுக்கான சிறுகுறிப்பு வரைவது மற்றும் கட்டுரை எழுதினால் மட்டும் போதும் என்ற அளவில் அதனைப் புரிந்து வைத்துக் கொள்வதும் ஒரு வரலாற்றுத் துரோகம் என என் மாணவர்களுக்கு என்றும் நான் சொல்லி வந்துள்ளேன்.
Flashback 1
அன்றைய பிரிட்டிஷ் அரசு இருப்புப் பாதை அமைக்க பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பகுதியில் நிலத்தினைத் தோண்டிய பொழுது ஒரு மேட்டுப்பகுதி தட்டுப்படுகிறது. அப்பகுதிதான் இறந்தவர் மேடு எனப் பொருள்படும்படி அழைக்கப்பட்ட மொஹஞ்சதாரோ. அங்கே நிலத்திற்கு அடியில் தட்டுப்பட்ட வித்தியாசமான மற்றும் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பு கண்டு வியந்துபோன பிரிட்டிஷ் அரசு அப்போது தொல்லியல்துறை இயக்குனராக இருந்த சர் ஜான் மார்ஷல் என்பவருக்குத் தகவல் அனுப்புகிறது. மேற்பரப்பு அகழ்வாராய்ச்சி எனப்படும் surface exploration தொடங்குகிறது.
அந்தப் பகுதியின் வெளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான கட்டட அமைப்புகள் மற்றும் தொல்பொருட்கள் எனப்படும் Artefacts கிடைப்பது தொடரவே, ஆய்வின் பரப்பு வட சிந்துவில் இருந்து குஜராத் வரையிலும் பலுசிஸ்தானத்திலிருந்து உத்தரப்பிரதேச எல்லை விளிம்புகள் வரையிலும் விரிவடைய ஆரம்பித்தது. அந்த மகத்தான அகழ்வாராய்ச்சி, ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நன்கு கட்டப்பட்ட ஒரு நகர நாகரிகம் அந்தப்பகுதியில் இருந்ததையும் அங்கிருந்த மக்கள் பன்னாட்டு வணிக தொடர்புகள் மாடமாளிகைகள் என மிக வசதியாக செழிப்புடன் ஒரு நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் வெளிக்கொண்டு வருகிறது.
இந்த அற்புதமான நாகரிகத்தின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் நிலவிய நாகரீகத்திற்கு சிந்துவெளி நாகரிகம்/ ஹரப்பா நாகரிகம் என்று சர் ஜான் மார்ஷல் பெயரிட்டு அது பற்றிய விரிவான ஆய்வறிக்கையை 1924-ஆம் ஆண்டு உலகம் அறிய வெளியிடுகிறார்.
Flashback 2
இந்தப் பகுதியை கண்டு வருவது மட்டுமே என் வாழ்நாள் கனவு என்று நான் இருந்த இந்த காலகட்டத்தில் தான் சிந்துவெளி ஆய்வாளரும் மற்றும் ஃபாதர் ஹீராஸ் ஐராவதம் மகாதேவன் ஆகியோரின் அடிச்சுவட்டில் சிந்துவெளி நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் திராவிட மொழிக்குடும்பத்தின் வழியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்ற கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் தரவுகளை சங்க கால இலக்கியத்தில் இருந்து எடுத்தும், இங்கும் அங்கும் கிடைத்த இலச்சினைகள் மற்றும் சுடுமண் பொம்மைகள் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் குறித்த கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டு உழைத்தும் இந்தியா முழுவதும் பயணித்து தரவுகள் சேகரித்தும் சிந்துவெளி நாகரீகப் பயணப் பாதை சுட்டும் திசை தெற்கு நோக்கி வருவதை அவதானித்து, சிந்து வெளி விட்ட இடமும் சங்ககாலம் தொட்ட இடமும் ஒன்றே ! என்று கவித்துவமான முழக்கம் மூலம் பல ஆய்வு நூல்களும் காணொளிகளும் கட்டுரைகளும் உரைகளும் நிகழ்த்தி உலகம் முழுவதும் இது பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கி உள்ள நமது சமகாலத்திய ஆய்வறிஞர் ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் நூல்கள் மற்றும் அவரது கானொலிகள்பற்றிய அறிமுகம் கிடைத்தது.
Flashback 3
இந்த நாட்டுக்கு முல்லைப் பெரியாறு அணை கட்டும் ஒருபொறியாளராக, பிரித்தானிய அரசு ஊழியராக மட்டுமே வந்த பென்னிகுக் என்ற ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை கட்டினால் அதன்மூலம் மேற்குத் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் மேம்படும் என்பதை உணர்ந்து நிதி பற்றாக்குறை மற்றும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றை காரணம் காட்டி அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்ட போதும் மனம் தளராமல் இங்கிருக்கும் விவசாயிகள் நலனுக்காக இங்கிலாந்தில் இருந்த தனது சொந்தச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் வந்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டி மேற்கில் தமிழக விவசாயிகளின் வாழ்வினை வளமாக்கிய அந்த ஆங்கிலேயரை இன்றளவும் அந்த பகுதி மக்கள் நன்கு நினைவு கூறுகிறார்கள்.
எப்படி தெரியுமா? தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு பென்னிகுக் என்ற பெயர் வைப்பது மற்றும் பென்னிகுக் பிறந்த நாளன்று அவர் பெயரில் பொங்கல் வைப்பது என்று தங்கள் நன்றியை மறவாமல் தொடர்ந்து செலுத்தி வருகின்றார்கள். மக்களுக்காக உழைத்த மாட்டுக்கு நன்றி சொல்லும் நாளான ஜனவரி 15 அன்று சிந்துவெளி நாகரீகத்தில் திராவிடப் பண்பாடு சாத்தியக்கூறுகளை ஆராய வழிவகுத்த மிகப்பெரும் கண்டுபிடிப்பாளர் ஆய்வறிக்கையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகறியச் செய்த சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தமிழ் நெடுஞ்சாலை வழியில் உரக்கச் சிந்தித்து வரும் திரு பாலகிருஷ்ணன் உரைகள் உருவாக்கி விட்டது.
இந்த சமயத்தில்தான் திரு பாலகிருஷ்ணன் அவர்களின் தொடர் முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை அமைக்கவும் சிந்துவெளியில் கிடைத்த இலச்சினகளின குறியீடுகள் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை கண்டறிந்து நிரூபிக்கும் நபருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தரவும் உறுதி தத்த சரித்திர நிகழ்வும் நடந்தேறியது. இந்தப் பின்னணியில்தான் மார்ஷல் பொங்கல் வைத்து நன்றி செலுத்துவது என்றும் நாங்கள் முடிவுசெய்தோம்.
Flashback 4
இறுதியாக ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். எகிப்து நாட்டிற்கு படை எடுத்துச்சென்ற நெப்போலியன் வென்று திரும்பி வரும்பொழுது அங்கிருந்து கவர்ந்து வந்த பல்வேறு கலைப் பொருட்கள் இடையில் அரிதான ஒரு கல்வெட்டும் இருந்தது. அதன் பெயர் Rosetto Stone. அதில் பொறிக்கப்பட்டிருந்தவை எல்லாம் பண்டைய எழுத்துமுறை. மூன்று வகையான எகிப்திய எழுத்து முறைகள். அதனை படித்து ஆராய்ந்து தக்க முறையில் நிரூபணம் செய்திட 20 ஆண்டுகள் உழைத்த ஒரு ஆய்வாளன் இருந்தான். அவன் பெயர் ஜீன் பிரான்கோயிஸ் சம்பொலியன். அந்தப் புதிரை விடுவித்த சம்பொலியன் மூலம் எகிப்திய வரலாற்றை அதன் தொல் பொருட்கள் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆதாரபூர்வமாக அறிய வாயத்தது.
அதுபோல ஒரு சம்போலியனை இங்கு உருவாக்கி சிந்துவெளி நாகரிக குறியீடுகளை விளக்கி அதன் பண்பாட்டுத் தளங்களில் மீது புது வெளிச்சம் பாய்ச்சி அரசு அறிவித்த பரிசுத் தொகையைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திருக்கும் வேளையில் நமது சம்போலியனை நாமும் கௌரவித்து அவன் பேரில் ஒரு பொங்கல் வைப்போம். அப்போது அது வெறும் சைவப் பொங்கலாக இருக்காது, மாறாக கிடாவெட்டி ஊருக்கே படையலிடும் பொங்கலாக அது இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல
மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!
சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக
Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!
Ratha Saptami: ரதசப்தமி அன்று எருக்க இலை குளியல் ஏன்? எதற்காக ?
{{comments.comment}}