முக்கனிகளில் சூப்பர் கனி.. எதற்காக நாம பலாப்பழ தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா

Jul 04, 2024,04:19 PM IST

முக்கனிகளில் ஒன்று தான் பலாப்பழம். அந்தப் பலாப் பழத்தைக் கொண்டாடும் தினம் இன்று. அதாவது உலக பலாப்பழ தினம் இன்று. சரி ஏன் இதைக் கொண்டாடுகிறோம் தெரியுமா.


பலாப் பழம்  மிக மிக சுவையானது மட்டுமல்ல, பல நன்மைகளும் நிறைந்துள்ளது. ஆண்டு தோறும்  ஜூலை 4ம் தேதி பலாப்பழ தினம் கொண்டாடப்படுகிறது. இது 2016ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பலாப்பழத்தின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைக்கவே ஆண்டுதோறும் பலாப்பழ தினம் கொண்டாடப்படுகிறது.




கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் சஞ்சீவினி என்றும் அழைக்கப்படுகிறது.


பலாப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. இது எடையை குறைக்க உதவுகிறது. பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். பலாப்பழத்தை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதோடு, பருவ கால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது.பலாப்பழம் சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.


இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனை உட்கொள்வதால் குடல்களும் சுத்தமாகிறது. பலாப்பழம் சாப்பிடுனதால் உடலில் இரும்பு சத்து, மட்டுமின்றி இரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் எலும்புகளும் வலுவடையும் தசைகளில் ஏற்படும் வலியும் எளிதில் போய்விடும். பலாப்பழத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் எலும்பு நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது.




மேலும், பலாப்பழம் குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது.பலப்பழம் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைக்கிறது. 


பலாப்பழம் ஒரு சுவையான இறைச்சிக்கு மாற்றான உணவாகும். பலாக்காய் கூட்டு, பலாப்பழம் குழம்பு, பலாக்காய் பொறியல், பலா கொட்டை கூட்டு, பலா கொட்டை குழம்பு, பலா விதை குருமா, பலாக்காய் பிரியாணி போன்றவையும் இதில் செய்யலாம். தமிழ் முக்கனிகளில் பலாவும் ஒன்று. இப்போது மாம்பழ சீசன் போல, பலா சீசனும் கூட. கிடைச்சா விட்ராதீங்க மக்களே.. வாங்கிச் சாப்பிட்டு அனுபவிங்க.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்