வின்னர் அஜீம்தான்.. ஆனால் மவுசு யாருக்கு பாருங்க.. செம ட்விஸ்ட் கொடுத்த கமல்!

Jan 23, 2023,04:24 PM IST
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் தேர்தெடுக்கப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அஜீம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



சீரியல், ரியாலிட்டி ஷோ என மக்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் டிவி சேனல் எதுவென்றால் அது விஜய் டிவி தான். பலவிதமான நிகழ்ச்சியின் மூலம் மக்களை குஷிப்படுத்திவரும் விஜய் டிவி வருடம் ஒரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் குஷிப்படுத்தி வருகிறது.

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் டிஆர்பி-யில் அனைத்தையும் ஓவர் டேக் செய்யும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வருடம் ஆக்டொபர் 9 ஆம் தேதி விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

21 போட்டியாளர்கள் கலந்துகொண்டு 100 நாட்கள் நடைபெற்ற இந்த ஷோவில், 17 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு மக்களால் வெளியேற்றப்பட்டனர். மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமாக நடைபெற்ற இப்போட்டியின் ஃபினாலே நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இறுதிச் சுற்றில் அஜீம், விக்ரமன், ஷிவின் என  3 பேர் இருந்தனர். ஆரம்பம் முதல் அஜீம் மற்றும் ஷிவின் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் போட்டியாளர்களாக இருந்து வந்தனர். ஆனால் விக்ரமன் பிக் பாஸ் வீட்டையே புரிந்துகொள்ள சில நாட்கள் தேவைப்பட்டது என கூறலாம். மேலும் அதே போல் போட்டியின் ஆரம்பத்தில் மக்களின் பார்வை விக்ரமன் மேல் விழாமல் சுவாரசியம் இல்லா நபராக கருதப்பட்டார்.

பின் நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாட்டு சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் விக்ரமனின் கருத்து ஒவ்வொன்றும் மற்ற போட்டியாளர்களை சூடேற்றியது. மக்களின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக விக்ரமனின் பக்கம் திரும்ப பலரும் விக்ரமனை ஆதரித்தனர். 

விக்ரமனே வெற்றி பெறுவார் என்று பலரும் பேசத் தொடங்கினர். காரணம், அவருக்கு ஆதரவு திடீரென அதிகரித்தது. உச்சகட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனே கூட விக்ரமனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்திருந்தார்.

விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டிலை திட்டி தூங்குவார் என எதிர்பார்த்த நிலையில் கமல் "இங்க தான் ட்விஸ்ட் இருக்கு" என கூறுவது போல் அஜீமின் கையை உயர்த்தி இவர் தான் வின்னர் என தெரிவிக்க பலருக்கு ஷாக் அடித்தது போல தான் இருந்தது.

தனது தனித்துவமான கருத்துக்களால் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்ற விக்ரமன் தான் பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் சண்டை சர்ச்சரவு என பிக் பாஸ் வீட்டில் எப்போதும் களேபரம் பண்ணும் அஜீமுக்கு டைட்டில் வின்னர் கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. 

அதேசமயம் நேற்றைய இறுதி மேடையில் அஜீமின் கையைத் தூக்கிய கமல்ஹாசன், அடுத்த விநாடி விக்ரமன் பக்கம் போய் நின்று கொண்டது வேறு ஒரு சிக்னலை கமல் வெளிப்படுத்தியதாகவும் பார்க்கப்படுகிறது. மக்களின் மனம் கவர்ந்த விக்ரமன் ஏன் வெல்லவில்லை என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்