சிஎஸ்கே ரூட்டைப் பிடித்த விஜய்.. திராவிட நிறம் இல்லாமல்.. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாய்.!

Aug 19, 2024,07:10 PM IST

சென்னை: கட்சிக் கொடிகளுக்கு நிறம் கொடுப்பதிலும் கூட பல்வேறு தத்துவங்கள், கொள்கைகள், அடையாளங்கள் அடங்கியிருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியக் கட்சிகள் வைத்துள்ள நிறங்களை முற்றிலுமாக தவிர்த்து புதிய அடையாளத்துடன் களம் குதிக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.


விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22ம் தேதிதான் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இன்றே அந்தக் கொடி குறித்த விவரம் வெளியாகி விட்டது. இதை வெளிப்படுத்தியதும் சாட்சாத் விஜய் தான். பனையூர் அலுவலகத்தில் அவர் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். அந்த வீடியோ இப்போது மீடியாக்கள் மூலம் வெளியாகி விட்டது.


இந்தக் கொடி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொடி முழுக்க மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில் விஜய்யின் முகம் வட்டத்துக்குள் உள்ளது. இந்த விஜய் முகமானது கட்சியின் லெட்டர் பேடில் உள்ள முகம்தான். அதில் மாற்றம் இல்லை. ஆனால் விஜய் தேர்வு செய்துள்ள கொடிக் கலர்தான் பலரையம் கவர்ந்துள்ளது. பட்டையைக் கிளப்பும் மஞ்சள் நிறத்தில் கொடி உள்ளது.




தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகளின் கொடிகளில் கருப்பு சிவப்பு நிறம் இருக்கும். தி.க., திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் இந்த நிறம்தான் பெரும்பாலும் இருக்கும். தலித் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் நீல நிறம் கூடுதலாக இருக்கும். பாஜகவிடம் காவி நிறம் உள்ளது. பாமக, தேமுதிகவிடம் மட்டுமே மஞ்சள் நிறம் உள்ளது. இந்த நிலையில் திராவிடம், தலித்தியம் என எந்த அடையாளமும் இல்லாமல் மஞ்சள் நிறத்தை விஜய் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அடையாளம்


மஞ்சள் என்பது தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை மங்களகரமானது என்ற எண்ணம் உண்டு. மஞ்சள் என்பதும் தமிழ்நாட்டு மக்களிடையே மிக முக்கியமான மங்களப் பொருளாக உள்ளது. இந்த நிலையில் விஜய்யும் அதே மஞ்சள் நிறத்தைத் தேர்வு செய்திருப்பது  சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. 


அதேசமயம், விஜய் ஒரு தீவிரமான சென்னை சூப்பர் கிங்ஸ் விசிறி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடராகவும் கூட அவர் இருந்துள்ளார். மேலும் அவரது கோட் படத்திலும் கூட சிஎஸ்கே அடையாளங்கள் இடம் பெற்றுள்ளன. சிஎஸ்கேவின் அடையாளமே மஞ்சள் நிறம்தான்.  அந்த வகையிலும் கூட இந்த நிறத்தை விஜய் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை. ஏன் இந்த நிறத்தை விஜய் தேர்வு செய்தார் என்பதை அறிய தற்போது மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்