சென்னை: என் தம்பி .. கொள்கை வேறாக இருந்தாலும் என் தம்பி என்று பாசத்துடன், தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென விஜய்க்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது பலரையும் வியப்புக்குள்ளாகியுள்ளது.
தவெக கட்சியை விஜய் ஆரம்பிப்பதாக அறிவித்த பிறகு பலரும் கூறியது, இந்தக் கட்சி முதலில் பதம் பார்க்கப் போவது நாம் தமிழர் கட்சியைத்தான் என்றே பலரும் கூறினர். காரணம், நாம் தமிழர் கட்சியின் பெரும் பலமான இளைஞர் பட்டாளத்தை, விஜய் ஒட்டுமொத்தாக தன் பக்கம் இழுத்துக் கொண்டு போய் விடுவார் என்று பலரும் கணித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்த செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அல்லது கண்டு கொள்ளாத சீமான் விஜய்யை தொடர்ந்து பாசத்துடன்தான் பேசி வந்தார். இதெல்லாம் தவெக மாநாடு நடைபெறும் வரைதான். அக்டோபர் 19ம் தேதி சீமான் விஜய் குறித்துப் பேசும்போது, விஜய்யின் கொள்கை என்னவாகவும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் என்றே கூறியிருந்தார் சீமான்.
ஆனால் அக்டோபர் 27ம் தேதி நடந்த தவெக மாநாட்டுக்குப் பிறகு பலரின் முகம் கருத்துப் போனது போல சீமானின் முகமும் மாறிப் போனது. தம்பியின் கொள்கை வேறு எங்க கொள்கை வேறு.. நாங்க சேர மாட்டோம் என்று பேச ஆரம்பித்தார் சீமான். ஆனால் நேற்று சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் பல படி மேலே போய் மிக் கடுமையாக விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார் சீமான். லாரி அடிச்சுச் செத்துப் போய்ருவ என்றெல்லாம் அவர் பேசியது அவரது உள்ளூர இருந்து வந்த கோபத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் விஜய் நாங்க நாகரீகமான அரசியல் செய்வோம்.. யாரையும் தாக்கிப் பேச மாட்டோம் என்று கூறி வரும் நிலையில் மறுபக்கம் அவருக்கு நேர் எதிராக லாரி அடிச்சு செத்துப் போய்ருவ என்றெல்லாம் வார்த்தைகளை பிரயோகம் செய்துள்ள சீமானின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி திடீரென விஜய்க்கு எதிராக சீமான் அக்னியைக் கக்க என்ன காரணம்.. அக்டோபர் 19ம் தேதிக்குப் பிறகு என்ன நடந்தது.. இருவருக்குள்ளும் ஏதாவது பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து அது பலன் அளிக்காமல் போய் விட்டதா.. விஜய்யை தன் பக்கம் இழுக்க சீமான் முயற்சித்து அது நடக்காமல் போய் விட்டதா.. அல்லது எல்லோரும் கூறியது போல நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் விஜய் கட்சியில் இணையத் தொடங்கி விட்டார்களா.. அல்லது நாம் தமிழர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரேனும் விஜய் கட்சியில் இணையப் போகிறார்களா.. அல்லது வேறு கட்சிகள் விஜய்யைத் தாக்க சீமானை பயன்படுத்த களம் இறங்கியுள்ளனவா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களும், கேள்விகளும் வலம் வர ஆரம்பித்துள்ளன. விஜய் எதிர்ப்பாளர்கள் இனி நேரடியாக அவரைத் தாக்கிப் பேசாமல் சீமான் மூலமாக தாக்குதல் நடத்துவார்கள் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கூறுகின்றனர்.
ஆனால் சீமான் எப்படித் தாக்கிப் பேசினாலும், விஜய்யிடமிருந்து அதுபோன்ற பதிலடிகள் வராது என்றே தவெகவினர் கூறுகின்றனர். விக்கிரவாண்டி மாநாட்டில் பேசியது போல டீசன்ட்டாகவே நாங்கள் அரசியல் செய்வோம்.. அதேசமயம், டீப்பாகவும் அது இருக்கும் என்று கூறி புன்னகைக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
{{comments.comment}}