"நான் ராகுல் காந்தியை கொன்னுட்டேன்".. ஏன் அப்படிச் சொன்னார் "ராகுல் காந்தி"?

Jan 09, 2023,08:46 PM IST

டெல்லி: பழைய ராகுல் காந்தி இப்போது இல்லை. அந்த ராகுல் காந்தியை நான் கொன்று விட்டேன். எனக்கு இமேஜ் முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்படவில்லை. இனி அந்த ராகுல் காந்தி திரும்ப வர மாட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.


பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் ராகுல் காந்தி. தற்போது அவர் ஹரியானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின்போது செய்தியாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது வைரலாகியுள்ளது.


"பழைய ராகுல் காந்தி உங்களது மனதில்தான் உள்ளார். அவரை நான் கொன்று விட்டேன். இப்போது அவர் இல்லை. எனது மனதில் இல்லை. அவர் போய் விட்டார்.. இனி வர மாட்டார்" என்று கூறினார் ராகுல் காந்தி.


ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது ராகுல் காந்தி அல்ல.. அவரை நீங்கள் பார்க்கலாம்.. ஆனால் புரிந்து கொள்ள முடியாது. இந்து புராணங்களைப் படியுங்கள். சிவனைப் படியுங்கள்.. உங்களுக்குப் புரியும். அதிர்ச்சி அடையாதீர்கள்.. ராகுல் காந்தி உங்களது தலைக்குள்தான் இருக்கிறார். என்னிடம் இல்லை. அவர் பாஜகவின் தலைக்குள் இருக்கிறார்.. என்னிடம் இல்லை" என்று கூறினார் ராகுல் காந்தி.


அத்தோடு விடவில்லை ராகுல்காந்தி.. " என் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு இமேஜ் பற்றிக் கவலை இல்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. நல்லவனாகவும் பார்க்கலாம், கெட்டவனாகவும் பார்க்கலாம்" என்றார் ராகுல் காந்தி.


மிகவும் தத்துவார்த்தமாக ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம்,  ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அவரது இமேஜை வலிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

IMD Alert: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை.. வலுவிழக்கும்.. புயலாக மாற வாய்ப்பில்லை!

news

6 மாவட்டங்களில் அதி கன மழை.. 4 மாவட்டங்களில் மிக கன மழை.. நாளை.. வானிலை மையம் தகவல்

news

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியு.,வில் அனுமதி.. தீவிர சிகிச்சை

news

Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு

news

ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!

news

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை:.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு

news

Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

news

புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்

news

பிரியங்கா காந்தி எனும் நான்.. அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார் பிரியங்கா காந்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்