ஊட்டி.. ஜிலுஜிலுன்னு ஜொலிக்கும் மலைகளின் "ராணி" .. இப்படி கொதிக்குதே.. வரலாறு காணாத உஷ்ணம் ஏன்?

Apr 30, 2024,05:15 PM IST

ஊட்டி:  ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னம்மா..  ஊட்டியை கொண்டாடாத உள்ளங்களே இருக்க முடியாது.. சினிமா முதல் அத்தனை துறையினருக்கும் பிடித்த ஒரு குளிர்வாசஸ்தலம் என்றால் அது ஊட்டிதான். மலைகளின் ராணி என்று சொல்வதற்கேற்ப ஊட்டி அத்தனை அழகு, கம்பீரம், இதம், குளுமை.. !


ஆனால் ஊட்டி மெல்ல மெல்ல தனது பெயரை பறி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. வழக்கமான நகரங்கள் போலவே ஊட்டியும் வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் கொளுத்தி எடுத்து வருகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என அறிவித்துள்ள நிலையில், மக்கள் குளுமையான இடத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் கோடைக்காலம் என்றாலே ஊட்டி, கொடைக்கானல்  தான் நம் நினைவுக்கு வரும்.  ஏனெனில் அங்கு நிலவும் குளுமையான சீதோஷ்ணம்தான். இதனால் கோடைகாலத்தில் மக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்கின்றனர். 




மலைகளின் ராணியாக ஊட்டியும், இளவரசியாக கொடைக்கானலும் கொண்டாடப்படவும் காரணமே அந்த அருமையான இதமான வெப்ப நிலைதான். ஆனால் அதற்கு இப்போது ஆப்பு வந்து விட்டது. முன்பெல்லாம் மே மாதம் வந்தால் தான் கோடை காலம் என்பதே தெரியும். அப்போதுதான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அந்த நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மக்கள் கூட்டமாக ஊட்டி போன்ற கோடை வாசத்தலங்களுக்கு அதிகமாக செல்வது வழக்கம். ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. 


ஜில்லுன்னு இருக்குமே என்று ஊட்டியை தேடி போனால் ஊட்டியிலும் வரலாறு காணாத வெயில் நிலவி வருகிறதாம். என்ன கொடுமை சார் இது. 29 டிகிரி வரை அங்கு வெப்ப நிலை பதிவாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஊட்டியில் இவ்வளவு வெப்பம் இதுவரை பதிவானதில்லையாம். சரி  ஊட்டியில் வெயில் ஏன் அதிகமானது.. இதற்கு காரணம் என்ன?


ஊட்டி தொடர்ந்து நகரமயமாகி கொண்டே வருகிறது. மக்கள் தொகை பெருக்கம்  அதிகமாகி உள்ளது. கட்டடங்கள் அதிகரித்து விட்டன. காடுகள் அழிக்கப்பட்டு, நிலங்களை ஆக்கிரமித்து ஊட்டி முழுவதும் கட்டிடங்களாக மாறி வருகின்றனர்.  நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளும் ஊட்டிக்கு அதிகமாக செல்வதால் வாகன பெருக்கமும் அதிகமாகி வருகிறது. இதனால் அங்கு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.




மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் ஆக்கிரமிப்பட்டு வருவதால் பயா சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுதான் வெயில் அதிகம் அடிக்க முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழலியாளர்கள் கூறுகிறார்கள். இதனை தடுக்க மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது, குளுமையான சூழல் காக்கப்படும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


நீர் சுழற்சி, நிலத்தடி நீரை சேமிக்க, வளிமண்டல சுழற்சியை கட்டுப்படுத்த மரங்கள் அவசியம். மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ளம்,  போன்ற பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க ஒவ்வொரு மரமும் அவசியம். இது தவிர மரங்களை வெட்டுவதால் தாவரங்கள், பூக்கள் பல்லுயிரிகளின் இனப் பெருக்கங்கள் ஆகியவை அழிந்து விடுகின்றன. 


தனி மரம் தோப்பாகாது என்பதை புரிந்து கொண்டு மக்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்கொரு மரங்களை வளர்க்கவும், காடுகளை பாதுகாக்கவும், உறுதி கொள்ள வேண்டும். அனைவருக்கும் மரங்களை நட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான், நிறைய மரங்களை வளர்க்க முடியும். நிறைய மரங்கள் வளர்ந்தால் தான் காடுகளை உருவாக்க முடியும். காடுகள் இருந்தால் தான் பல உயிரினங்களும், பல்லுயிர் பெருக்கங்களும் நடைபெறும். இது மட்டுமல்லாமல் விவசாயம் செழிக்கும்.  நிலத்தடி,நீர் வளம் காக்கப்படும். வெப்பம் குறைந்து, மழைப்பொழிவு அதிகரிக்கும். அப்போதுதான் உணவு தானிய உற்பத்தி சிறந்து விளங்கி, மக்கள் பசியாற முடியும். தண்ணீர் தட்டுப்பாடும், பஞ்சம் ஏற்படாமலும் இருக்கும். இதற்காகத்தான் காடுகளை பாதுகாக்க வேண்டும்.ம ரங்கள் வளர்க்க  வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.




மரங்களை நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது  அரசின் கடுமையாகும். விவசாய நிலங்கள், காடுகள் உள்ள இடங்களில் கட்டுமானங்கள் கட்ட அரசு அப்ரூவல் அளிக்கக்கூடாது. தனிநபர்கள் போலியாக காடுகள் சார்ந்த இடங்களையும், நிலங்கள் சார்ந்த இடங்களையும், விற்பனை செய்து கட்டுமானம் கட்டினால்  சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே காடுகளையும் மரங்களையும் பாதுகாக்க முடியும்.. ஊட்டியையும்  காக்க முடியும்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்