ரம்ஜான் நேன்பின் மகிமை.. ஏன் நோன்பிருந்து ரம்ஜானைக் கொண்டாடுகிறார்கள்?

Mar 04, 2025,01:48 PM IST

சென்னை: புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. முஸ்லீம்கள் புனித ரமலான் மாதத்தை நோன்பிருந்து முடித்து, பண்டிகையைக் கொண்டாடக் காத்துள்ளனர். 


இஸ்லாமில் ரமலான் மாதம் என்பது புனித மாதமாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து கடைசி நாளை ரம்ஜான் பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் மாதம் நோன்பு கடைப்பிடிப்பதன் மூலம், தங்களைத் தன்னம்பிக்கையுடன் கட்டுப்படுத்தி, எல்லா புலன்களையும் அடக்கி ஆன்மீக நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள் இஸ்லாமியர்கள். 


காலை முதல் மாலை வரை நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதன் பின்னர் நோன்பு திறப்பார்கள். அப்போது பேரிச்சை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிக அளவில் சாப்பிடுவது வழக்கம். இது நமது உடலின் சத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் பிடித்து வைத்திருக்க உதவும்.நோன்பு காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்தை இழந்து விடாமல் தடுக்க அதிகமான நீரை அருந்துவது வழக்கம். சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருப்பதும் உண்டு.


விடியற்கால உணவு அதாவது சஹூர்.. விடியற்காலையில் ஆரோக்கியமான உணவுக்குப் பிறகு நோன்பு தொடங்கும். இப்தார் எனப்படும் நோன்பு திறப்பானது மாலையில், சூரியன் மறைவுக்குப் பிறகு தொடங்கும். 




ரம்ஜான் நோன்புக் காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல்,  தானம் கொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யலாம்.  நோன்பு காலத்தின்போது, வாக்குவாதம், குறைசொல்வது, கோபப்படுவது, சண்டை போடுவது போன்றவற்றில் ஈடுபடாமல் அமைதியான முறையில் நோன்புக் காலத்தைக் கடக்க வேண்டும்.


விரதம் அல்லது நோன்பு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது. பல்வேறு மதங்களிலும் இந்த விரதமானது நடைமுறையில் இருந்து வருவதுதான். நோன்பு காலத்தின்போது நமது உடல் சீராக மாறுகிறது. உடலின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு உடலும், மனமும் நலமடைகிறது.


நோன்பு இருப்பதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மன வலிமையையும் இது அதிகரிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்