சென்னை: கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். முதலில் அவரிடம் திரைப்படம் பற்றிதான் அனைத்து மீடியாக்களும் கேட்டீர்கள். அவர் ஒரு கட்சியின் தலைவர். ஆனால் என்னிடம் அரசியல் கேட்காதீர்கள் என்று சொல்லியும், நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிந்திறாத சிலரிடம் திரும்பத்திரும்ப அதைத்தான் கேட்கிறீர்கள். இது என்ன மாதிரியான டிசைன்? உங்களை இயக்குவது யார்? என்று ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகியவரான நடிகை வினோதினி வைத்தியநாதன்.
நடிகையாக மட்டுமல்லாமல், சமூக பிரச்சினைகளில் தனது அழுத்தமான கருத்துக்களை சோசியல் மீடியாமல் தவறாமல் பதித்து வருபவர் வினோதினி. சமூக பிரச்சினைகள், அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வந்த வினோதினி பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அதிலிருந்து அவர் வெளியே வந்து விட்டார்.
கமல்ஹாசனை தவற விட்டு விட்டது தமிழ்நாடு என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன்னைத் தேடி பலரும் இப்போது பேட்டி கேட்டு வருவதாக கூறியுள்ளார் வினோதினி. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு கருத்தைக் கவருவதாக உள்ளது. அவரது லேட்டஸ்ட் எக்ஸ் தளப் பதிவு:
ஊடகங்கள் இரண்டு நாட்களாக என்னிடம் கேட்பது. ஏன் மநீம விட்டீர்கள்?
நேற்று ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டி இத்தருணத்தில் வெளிவந்ததா இல்லையா என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அது யார் என்பது முக்கியமல்ல, சொல்லப்பட்டதுதான் முக்கியம்.
பேட்டி ஆரம்பித்தவுடன் - ஏன், மநீம விட்டீர்கள் என்று நெறியாளர் ஆரம்பிக்க, நான் சில கேள்விகளைக் கேட்கவா என்று நான் சொல்ல, சரி என்றார்.
நான் கேட்டதன் சாரம் இதோ. (முக்கியமாக, நான் கேட்ட அத்தனையும் அவர்களது கேமிராவில் பதிவாகியுள்ளது).
1. நான் மநீமவில் சேர்ந்தபொழுது ஏன் நீங்களோ பல ஊடகங்களோ எந்த பேட்டியும் எடுக்க வரவில்லை? விடுவித்துக்கொண்டேன் என்றதும் எல்லோரும் வருகிறீர்கள்?
2. நேற்று கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். முதலில் அவரிடம் திரைப்படம் பற்றிதான் அனைத்து மீடியாக்களும் கேட்டீர்கள். அவர் ஒரு கட்சியின் தலைவர். ஆனால் என்னிடம் அரசியல் கேட்காதீர்கள் என்று சொல்லியும், நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிந்திறாத சிலரிடம் திரும்பத்திரும்ப அதைத்தான் கேட்கிறீர்கள். இது என்ன மாதிரியான டிசைன்? உங்களை இயக்குவது யார்?
3. மக்கள் நீதி மய்யம் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து தமிழ் மீடியா ஒரு நெகட்டிவ் நரேட்டிவ் செட் பண்ணத்தான் பார்த்திருக்கிறது. மநீமவை பாஜகவின் பி டீம், அந்த அஜெண்டாவோடுதான் கட்சி தொடங்கியுள்ளார் என்று சித்தரித்தனர். ஏன்? இது யார் அவர்களுக்கு செட் செய்த அஜெண்டா?
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போதே நெறியாளர் என்னை நிறுத்தி, மேடம் நீங்கள் இதை எவ்வளவு பேசினாலும் எங்கள் எடிட்டர் இதை கட் செய்துவிடுவார். நீங்கள் கேட்பதன் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இந்த வீடியோவில் நீங்கள் இந்த கண்டெண்டை பேசினால், எங்கள் சேனலைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதுபோல் ஆகிவிடும். அதனால் இதை வேறு சேனலில் பேசுங்கள். நாம் உங்கள் பயணம், வருங்கால திட்டம் என்று பொதுவாக போய்விடுவோம் என்றார். அவர் சொன்னது நியாயமானதாக இருந்ததால் நானும் ஒப்புக்கொண்டேன்.
ம.நீ.மவுக்கு எதிராக செட் செய்யப்பட்ட நரேட்டிவ்
இந்த அஜெண்டா பல வருடம் முன்பே செட் செய்யப்பட்டது. ரங்கராஜ் பாண்டே சாருஹாசன் அவர்களைப் பேட்டியெடுத்தது, பிறகு அர்னாப் கோஸ்வாமியை ஏவிவிட்டது என்று தொடர்ந்து மநீமவை ஒரு சாரார் அட்டாக் செய்துகொண்டே வந்திருக்கின்றனர். இதில் மீடியா மட்டுமல்லாது, பொய் செய்தி பரப்புவதற்கென்றே ஒரு குழு இங்கு சமூக வலைதளத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறது. நான் யாரைக்குறிப்பிடுகிறேன் என்று அவர்களுக்கே நன்றாகத்தெரியும்.
மநீமவில் புதிதாக ஒருவர் சேர்ந்தாலோ, விலகினாலோ, அரசியல் கட்சி சார்ந்தவர்களைவிட முதலில் இவர்கள் தான் ஆஜராவார்கள். நம்மவர் கமல்ஹாசன் காலடியில் படுத்துக்கிடந்து ஏதாவது கண்டெண்ட் கிடைக்குமா என்பதுதான் இவர்களது வேலையே. என்ன செய்வது பாவம். அவர்களும் அரசியல் செய்யலாம் என்ற வெறியில் 30 வருஷமாக இருக்கிறார்கள். அந்தக்கனவு கானல் நீராகவே போய்விட்டது.
மநீம நபர்களுக்கு - ஒரு பேட்டியில் நான் ஏதோ பொய் செய்தி அல்லது உண்மையற்ற தகவலைச் சொல்லிவிட்டேன் என்று இந்த கும்பல் உங்களைத் தூண்டிவிட்டிருக்கிறது. என் புரிதல் தவறு, எனக்கு வந்த செய்தி பொய் என்று இன்று காலை ஒரு முக்கிய நிர்வாகியிடமிருந்து அறிந்துகொண்டேன். அதற்கான விளக்கத்தை நான் அடுத்து கொடுக்கவிருக்கும் பெரிய சேனலின் பேட்டியில் கொடுத்துவிட்டு இந்த புரளிக்கு என் தரப்பில் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறேன்.
மேலும், நான் மேற்கூறிய குழு பொங்குவதற்கு ஒரே காரணம், அவர்களுடைய தலைவரை நாக்பூரின் கருவி என்று நாம் இனம்கண்டு அதை பலர் பொதுத்தளத்தில் சொல்வதுதான். பாவம், வருத்தமாகத்தானே இருக்கும்.
இதில் மிகுந்த வருத்தம் என்னவென்றால், இவர்களுடைய சினிமா ரசிகச்சண்டையினால் பெருமளவு இழப்பு அரசியல் செய்யவந்த நம்மவருக்குத்தான். இன்றும் தந்திரம் அறியாமல் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறார்.
சரி அடுத்து என்ன, அதானி வீட்டு திருமணத்தில் ஆரஞ்சு கலர் ஜிப்பா போட்டுக்கிட்டு see more… என்று கூறியுள்ளார் வினோதினி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான.. பிரச்சாரம் முடிவுக்கு வந்தது!
விடாமல் தொல்லை கொடுத்த நபர்.. உறவின்போது வாயைப் பொத்தி.. கழுத்தை நெரித்துக் காலி செய்த பெண்!
சிம்புவின் புதிய அவதாரம்.. 50வது படத்தில் தயாரிப்பாளராக புது வடிவம்.. இயக்கம் தேசிங்கு பெரியசாமி
வேங்கைவையல் வழக்கு.. வன்கொடுமை தடுப்பு கோர்ட்டிலிருந்து.. நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம்!
கமலிடம் சினிமா பற்றியும், ரஜினியிடம் அரசியலையும் பேசுகிறீர்கள்.. என்ன டிசைன் இது? - வினோதினி கேள்வி!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தால் பதட்டம்.. மதுரை முழுவதும்.. இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு!
தினம் ஒரு கவிதை.. இனி ஒரு விதி செய்வோம்!
Ratha Saptami 2025: ரதசப்தமி.. சூரிய மந்திரம் சொல்லி.. நீண்ட ஆயுளும், நலமும், வளமும் பெறுவோம்!
அண்ணாவின் 56வது நினைவு தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி
{{comments.comment}}