கெட்ட வார்த்தை தப்புதான்.. ஆனால் லியோவுக்கு மட்டும் ஏன் கடும் எதிர்ப்பு?

Oct 07, 2023,11:15 AM IST

சென்னை: லியோ டிரெய்லரில் விஜய் பேசிய  கெட்ட வார்த்தை வசனம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதேசமயம், விஜய் பேசிய வசனத்தை விட மிக மோசமான வசனங்கள் பேசப்பட்டு படங்களிலும் அவை இடம் பெற்றபோது இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பவில்லை என்பது யோசிக்க வைக்கிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் ஆபாச வசனங்கள், வன்முறைக் காட்சிகளுக்கு சென்சார் போர்டு கைவைத்த பின்னரே யுஏ சான்று கிடைத்தது. அதன் பின்னர் தான் லியோ டிரெய்லர் வெளியிடப்பட்டது. 




இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை திரைப்படமாக பார்க்காமல் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால், இப்படம் விஜய் அரசியலுக்கு வருவதற்கான என்ட்ரி படமாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். 


இந்த நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியானது. அதை ரசிகர்கள் இடை விடாமல் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டுள்ளனர். விஜய் வரும் ஒவ்வொரு காட்சியையும்  ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதேசமயம், 3 நிமிடமே உள்ள டிரெய்லரில் இடம் பெற்ற அந்த ஒத்த வார்த்தையை மட்டும் சிலர் கிடுக்குப்பிடியாக பிடித்துக் கொண்டு விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். 


விஜய் எப்படி இப்படிப் பேசலாம்.. இந்தக் கெட்ட வார்த்தை தேவையா.. இப்படியெல்லாம் பேசலாமா.. குழந்தைகள் கெட்டுப் போய் விட மாட்டார்களா என்று சரமாரியாக கேள்விகள் வருகின்றன.. எல்லாமே சரியான நியாயமான கேள்விகள்தான். கண்டிப்பாக விஜய் இதைத் தவிர்த்திருக்கலாம்.. அல்லது மியூட் செய்திருக்கலாம்தான்.. ஆனால் செய்யாமல் விட்ட விஜய்யின் தவறு அல்ல.. இயக்குநர்தான் இதைச் செய்திருக்க வேண்டும். அவர் ஏன் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை.


அதேசமயம், இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகள் இப்போதுதான் முதல் முறையாக பேசப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்பு இதை விட மட்டகரமான வார்த்தைகள் பேசப்பட்டதையெல்லாம் பலர் உதாரணத்திற்கு எடுத்து வைக்கின்றனர்.  இதுவரைக்கும் தமிழ் திரையுலகில் என்னற்ற திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் கெட்டவார்த்தைகளும் அதிகளவில் கையாளப்பட்டிருக்கின்றன. 


குறிப்பாக விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம். வட சென்னை படத்திலும் சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டிருக்கும். ஏன் பாடல்களில் கூட கெட்ட வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் சிலர்.  தமிழ் சினிமாவில் தற்பொழுது இயல்பானதாகவே கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு வந்துவிட்டது.


இப்படியிருக்க லியோ படத்தில் விஜய் பேசியதை மட்டும் சர்ச்சையாக்கி இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பெரும்பாலனவர்களை யோசிக்க வைத்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால் அவர் குறி வைக்கப்படுகிறாரா அல்லது விஜய் என்ற காரணத்துக்காகவே அவர் குறி வைக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


லியோ படம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்து வந்தன. ஆடியோ லான்ச் நடக்கவில்லை. இதுவே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்போது இந்த ஒத்த வார்த்தை பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்