அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் செல்ல காரணம் தெரியுமா?

Dec 25, 2024,04:50 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உலகப் புகழ்பெற்றதாகும். இந்த ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் வருடத்தின் அனைத்து நாட்களும் வந்து செல்வத உண்டு. அதுவும் வேளாங்கண்ணியில் திருவிழா நடைபெறும் போது பல லட்சம் மக்கள் கூடி பிரார்த்தனை நிறைவேற்றுவதை காண முடியும்.


வேளாங்கண்ணி ஆலயத்திற்கு அதிக அளவில் மக்கள் வருவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அதைப் பார்ப்போமா!


சுமார் 400 வருடங்களுக்கு முன் நாகப்பட்டினத்தில் வசித்த பணக்காரர் ஒருவருக்கு, இடையர் குலத்தை சேர்ந்த சிறுவன் ஒரு தினமும் பால் கொண்டு சென்று கொடுத்து வந்தான். ஒருநாள் பால் கொண்டு செல்லும் போது மிகவும் சோர்வாக இருந்ததால், வழியில் இருந்த ஒரு குளத்தின் அருகில் இருந்த ஆல மரத்தின் நிழலில் சற்று ஓய்வெடுக்க அமர்ந்தான். அப்போது பளிச்சென் ஒளிவீச, தெய்வீக தன்மை கொண்ட ஒரு தாய், கையில் குழந்தையை ஏந்திய படி வந்து, தன்னுடைய குழந்தைக்கு சிறிது பால் தரும்படி அந்த சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் மறுக்காமல் கொடுத்து விட்டான். சிறிது நேரத்தில் அன்னையும், குழந்தையும் அங்கிருந்து மறைந்தனர்.




பணக்காரர் வீட்டிற்கு பால் கொண்டு போக நேரமாகி விட்டதால் வேகமாக சென்றான் சிறுவன். தாமதமாக வந்ததுடன் சிறுவன் கொண்டு வந்த பாலின் அளவும் குறைந்திருந்ததால், அது பற்றி சிறுவனிடம் விசாரித்தார் பணக்காரர். என்ன சொல்வது என தெரியாமல் சிறுவன் தயங்கி நின்ற போது, சிறுவன் கொண்டு வந்த பால் குடம் நிரம்பி வழிய துவங்கியது. இதைக் கண்ட பணக்காரர் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனிடம் விஷயத்தை கேட்க, அவனும் தான் கண்ட அன்னையை பற்றி கூறினான்.


அந்த சிறுவனின் கையில் இருந்த பாத்திரத்தில் பால் தொடர்ந்து நிரம்பி வழிந்து கொண்டே இருந்த அதிசயத்தை கண்ட அவர், அந்த சிறுவன் கூறிய இடத்திற்கு சென்றார். அன்னை திருக்காட்சி கொடுத்த அந்த இடத்திலேயே சிறிய ஆலயம் ஒன்றை அமைத்தார். இந்த குளத்தை தான் இன்றும் வேளாங்கண்ணி மாதா குளம் என நாம் காண்கிறோம்.


சில ஆண்டுகளுக்கு பிறகு இதே போல் மோர் வியாபாரம் செய்து மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவனுக்கு காட்சி அளித்த அன்னை வேளாங்கண்ணி, அவனை நடக்க வைத்ததுடன், அவன் மூலமாக தனக்கு ஆலயம் அமைக்கவும் அப்பகுதியில் வசித்த கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவருக்கு அறிவித்திருத்தார். அது வரை சிறிய ஆலயமாக மட்டுமே வேளாண்ணி மாதாவின் ஆலயம் இருந்தது. கி.பி., 17ம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள மாக்கொவில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி சென்ற போர்ச்சுக்கீசிய வியாபாரிகள் கப்பல், புயலால் பாதிக்கப்பட்டது. கப்பல் மூழ்கும் நிலைக்கு வந்த சமயத்தில் அவர்கள் கன்னி மரியாவிடம் பிரார்த்தனை செய்தனர்.


தாங்கள் நலமுடன் கரை சேர்ந்தால், அந்த இடத்தில் அன்னைக்கு ஆலயம் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார்கள். அதே போல் செப்டம்பர் 08ம் தேதி கன்னி மரியாவின் பிறந்தநாளில் அவர்கள் வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தனர். தங்களை காத்த மரிய அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினர். போர்ச்சுக்கீசிய மாலுமிகள் இவ்வழியாக செல்லும் போது வேளாங்கண்ணி வந்து வழிபட்டு செல்லும் வழக்கத்தை வைத்திருந்தனர். தற்போதுள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயம் போர்ச்சுக்கீசியர்கள் காலத்தில் எழுப்பப்பட்டதாகும்.


ஆலயம் எழுப்பும் சமயத்தில் மட்டுமல்ல இன்று வேளாங்கண்ணி அன்னை தன்னை நாடி வருபவர்களின் வாழ்வில் பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தி, அவர்களின் குறைகளை, துன்பங்களை போக்கி வருகிறார். வேளாங்கண்ணி அன்னையிடம் முறையிட்டால் தங்களின் கஷ்டம் தீரும் என்பதால் தான் இன்றும் ஜாதி, மதங்களை கடந்த பல லட்சம் பேர் வேளாங்கண்ணிக்கு வந்து வேண்டி செல்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்