தேசிய கட்சி அந்தஸ்து பறிப்பு.. சட்டப் போராட்டத்தில் இறங்குவோம்.. திரினமூல் அறிவிப்பு

Apr 11, 2023,10:40 AM IST

புதுடில்லி : இந்திய கம்யூனிஸ்ட், பாமக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட ரீதியாக இதை எதிர்க்கப் போவதாக திரினமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில கட்சிகளின் அந்தஸ்தை ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து, அவர்களின் ஓட்டு வங்கி அடிப்படையில் தேசிய மற்றும் மாநில கட்சி அந்தஸ்தை வழங்கி வருகிறது. 2016 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு வந்தது. 



தேர்தல் கமிஷன் விதிகளின் படி, ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கடைசியாக நடந்து முடிந்த லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட்டு குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநிலத்திலும் 6 சதவீதம் ஓட்டுக்களையாவது பெற்றிருக்க வேண்டும்.  அந்த கட்சி குறைந்தது இரண்டு லோக்சபா இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

ஆனால் இதை பூர்த்தி செய்யாத, இந்திய அளவில் பெரிய கட்சிகளான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அதே சமயம் டில்லி, கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய நான்கு ���ாநில தேர்தல்களில் அதிக வாக்குகளை பெற்ற அருவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.  ஆம் ஆத்மி கட்சி டில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்துள்ளது. கோவா சட்டசபையில் இரண்டு எம்எல்ஏ.,க்களை பெற்றுள்ளது.  குஜராத் சட்டசபை தேர்தலில் 5 இடங்களை கைப்பற்றி, 12.9 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.

தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்ததை அடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். நல்ல நேரம் வந்து விட்டால் யாருடைய கொள்கையையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆம்ஆத்மியின் காலம் வந்து விட்டது. இந்தியாவிற்கான நேரமும் வந்து விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம்ஆத்மி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே தற்போது  அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. 

திரினமூல் காங்கிரஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், எத்தனையோ போராட்டங்களைப் பார்த்து விட்டோம். இதையும் சட்ட ரீதியாக எதிர்த்து கடந்து வருவோம் என்று தெரிவித்துள்லது. கடந்த 2016ம் ஆண்டு முதல் தேசியக் கட்சியாக வலம் வந்தது திரினமூல் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்து. கோவா மற்றும் வட கிழக்கு மாநில சட்டசபைத் தேர்தல்களில்  மோசமாக செயல்பட்டதால் அதன் தேசியக் கட்சி அந்தஸ்து பறி போயுள்ளது.

1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். அடுத்த ஆண்டே அதாவது 2000மாவது ஆண்டு நடந்த பல்வேறு தேர்தல்களில் கிடைத்த வெற்றியைத்  தொடர்ந்து அக்கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்து கிடைத்தது.

1925ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் பழமையான கட்சிகளில் ஒன்று. 1989ம் ஆண்டு இக்கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இப்போது அதன் பெருமை பறி போயுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்