நம் உடலுக்கு ஊட்டச்சத்து என்பது இன்றியமையாதது. அதிலும் இரும்புச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் நமது ரத்த நாளங்களில் ஹீமோகுளோபின் எனப்படும் ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு சிவப்பணுக்கள் உதவிகின்றன.
நமது உடலில் இரும்பு சத்து குறைந்தால் ரத்த சோகை உண்டாகும். அப்போது சிவப்பணுக்கள் குறைகிறது. இதனால் ரத்த சோகை ஏற்பட்டு இரத்த ஓட்டம் சீராக நடைபெறாது.
இதனை எப்படி சரி செய்வது..?
நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவில் எவ்வளவு இரும்புச்சத்து இருக்கிறது என்பது தெரியுமா. மனிதன் தினமும் உட்கொள்ளும் உணவில் இருந்து 30 சதவிகிதம் உறிஞ்சப்படுகிறதாம். குறிப்பாக உலர் பழங்கள், திராட்சை, பேரீட்சை, முருங்கைக்கீரை, ஈரல் இறைச்சி மீன் போன்றவை இரும்பு சத்துகள் கொண்ட உணவு பொருட்கள் ஆகும்.
நாம் தினசரி இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சருமம், தலைமுடி, நகங்கள், எலும்புகள் வலிமை பெற முக்கிய பங்கு வைக்கிறது.
நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முருங்கைக்கீரையில் நிறைய இரும்பு சத்துக்கள் உள்ளன. நாம் காலையில் எழுந்த உடனேயே முதலில் குடிப்பது டீ தான். டீ குடித்தால் தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக அமையும் என்ற மைண்ட் செட் நமக்குள்ளே இருக்கும். ஆனால் ஆரோக்கியமான டீயை எப்போதும் ட்ரை பண்ணி பார்த்து இருக்கீங்களா. அப்படி ஒரு புதுவிதமான டீயைதான் இப்ப சொல்லப் போறோம்.. அதற்கு பெயர் முருங்கை கீரை டீ.
எப்பவுமே முருங்கைக் கீரையை வைத்து பொரியல், கூட்டு, சூப் இப்படித்தானே செய்றீங்க. அது ரொம்ப போர் அடிக்குதா..? உங்க குழந்தைகள் இந்த மாதிரி கீரைகளை சாப்பிட மாட்டார்களா..? அப்ப நாங்க சொல்ற இந்த ஐடியா படி உங்க குழந்தைகளுக்கு இந்த டீயை ட்ரை பண்ணி பாருங்க.
முருங்கைக்கீரை டீ செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை-2 கைப்பிடி அளவு
நாட்டு சக்கரை தேவையான அளவு
தண்ணீர்- இரண்டு டம்ளர்
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். தண்ணீர் காய ஆரம்பித்ததும் அதில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரைகளை போட்டு பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பிறகு பத்து நிமிடங்கள் ஆனதும் தேவையான அளவு நாட்டு சர்க்கரையை போட்டு கரைந்ததும் இறக்கி வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டிகளை கொண்டு வடித்துக் கொள்ள வேண்டும். சூடான முருங்கைக் கீரை டீ தயார்.
நமது உடலுக்கு மிகவும் ஹெல்தியான, விரைவில் தயார் செய்யக்கூடிய, சூப்பரான சுடச்சுட முருங்கைக்கீரை டீயை நீங்களும் செஞ்சு குடித்துப் பாருங்கள். இன்று நம் வாழ்வில் ஆரோக்கியமான ஒரு பானத்தை எடுத்துக்கொண்டு என்ற திருப்தி கிடைக்கும். செஞ்சு பார்ர்த்து, குடித்து விட்டு டேஸ்ட் எப்பிடி இருந்துச்சுன்னு எங்களுக்கும் சொல்லுங்க.. மறக்காம!
{{comments.comment}}