அரசியல் விதை போடப்பட்ட இடத்திலேயே மீண்டும் விதைக்கப்பட உள்ள "கேப்டன்" உடல்!

Dec 29, 2023,02:31 PM IST

சென்னை : தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் உடல், கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்தது ஏன் என்பது பின் மிகப் பெரிய அரசியல் வரலாறே உள்ளது. 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 28ம் தேதி காலை உயிரிழந்தார். அவரது உடல் டிசம்பர் 29ம் தேதியான இன்று மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இடம் விஜயகாந்த்தின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இடம் என்பதும், அவரது அரசியல் வாழ்க்கைக்கு விதை போட்ட இடம் என்பதும், அதனால் தான் அதே இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது என்ற காரணமும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 




ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்


ஒரு சாதாரண மனிதராக சினிமா உலகிற்குள் நுழைந்த விஜயகாந்த், படிப்படியாக வளர்ந்து உச்ச நடிகராக சிகரம் தொட்டார். பிறகு தனது ரசிகர்கள் மன்றங்கள் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்தார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் தான் ஒரு ஹீரோவாக வாழ்ந்து காட்டினார். நல்ல நடிகர் என்பதைத் தாண்டி நல்ல மனிதராக அனைவரின் மனதிலும் நின்றார். 


மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே இருந்த விஜயகாந்த், தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு கோயம்பேட்டில் 1 ஏக்கர் நிலத்தில் தனது அம்மா ஆண்டாள் மற்றும் தனது தந்தை அழகர்சாமி ஆகியோரின் பெயரில் ஆண்டாள் அழகர் என்ற பெயரில் திருமண மண்டபம் ஒன்றை கட்டினார்.


2000 ம் ஆண்டு விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்திற்கு கொடியை அறிமுகப்படுத்தினார். 2001 ம் ஆண்டு அவரது ரசிகர் மன்ற உறுப்பிவர்கள் அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அரசியல் கட்சி துவங்கி, 2006, 2009 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆனார் விஜயகாந்த். ஆனால் அதற்கு முன் 2006 ம் ஆண்டில் விஜயகாந்திற்கு சொந்தமான கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டது தான் அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புனையை ஏற்படுத்தியது.




இடிக்கப்பட்ட கல்யாண மண்டபம்


பாலம் அமைப்பதற்காக அந்த இடம் தேவைப்படுவதாக விஜயகாந்த்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தன்னுடைய கல்யாண மண்டபத்தை இடிக்க வேண்டாம் என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்து, விஜயகாந்த் கோரிக்கை வைத்தார். இருந்தாலும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர் உயிரை விட மேலாக நினைத்த கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டது. 


இடிந்து போன விஜயகாந்த், தன்னுடைய அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காக தான் திமுக இவ்வாறு செய்துள்ளது என குற்றம் சாட்டி, இனி எந்த காலத்திலும் திமுக.,வுடன் கூட்டணி கிடையாது என முடிவு செய்தார். அதே போல் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி வைத்த போதும், கடைசி வரை திமுக பக்கம் அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. 


இடிக்கப்பட்ட இடத்திலேயே விதைக்கப்படுகிறார்




எந்த இடத்தில் தனது கல்யாண மண்டபம் அடிக்கப்பட்டதோ அதே இடத்தில் தனது கட்சி அலுவலகத்தை கட்டினார். 56 சென்ட் இடிக்கப்பட்டது போது மீதமுள்ள இடம் விஜயகாந்த்திடம் திரும்பி அளிக்கப்பட்ட இடத்திலேயே கட்சி அலுவலகத்தை கட்டினார். அந்த இடத்தில் தற்போது கல்யாண மண்டபமும் இயங்கி வருகிறது. அதே இடத்தில் தான் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இடத்திற்காக மிகப் பெரிய வேதனையை சந்தித்து, பல போராட்டங்களை எதிர்கொண்டவர் விஜயகாந்த். 


கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளாக திகழ்ந்த காலத்திலேயே மூன்றாவது மாற்று சக்தியாக உருவெடுத்து, அரசியலில் வளர்ந்து, மக்களின் மனதில் இடம்பிடித்த விஜயகாந்த், தனது கடைசி காலம் வரை திமுக பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அதே சமயம் கருணாநிதிக்கும், விஜயகாந்த்திற்கும் இடையேயான தனிப்பட்ட உறவு மிக உயர்ந்ததாக இருந்தது.


எந்த இடம் இடிக்கப்பட்டதால் மனம் வேதனைப்பட்டாரோ அதே இடத்தில்தான் மீளாத் துயில் கொள்ளப் போகிறார் கேப்டன் விஜயகாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்