வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி.. எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார்.. "இவரா.. அல்லது அவரா"?

Mar 03, 2024,05:42 PM IST

டில்லி : 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடியே போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் இவரை எதிர்த்து வாரணாசி தொகுதியில் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்க போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது தேசிய அரசியலையே பரபரக்க வைத்துள்ளது.


மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு லோக்சபாவின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் எந்த நேரமும் தேர்தல் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் படுபிஸியாக வேலை பார்த்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக நேற்று (மார்ச் 02) முதல் கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


இதில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையே நாடு முழுவதிலும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். 


பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என சொல்லப்பட்ட போதே தமிழகத்திலும் பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தமிழகம் குறித்த பாஜக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தமிழகம் குறித்து இன்னும் பாஜக முடிவு செய்யவில்லை என்பது தெளிவாகி உள்ளது.


மோடியை எதிர்த்து நிற்கப் போவது யார்?




தமிழகத்தில் பாஜக எடுக்க போகும் முடிவு என்ன என்பதை தாண்டி, தற்போது வாரணாசியில் மீண்டும் மோடி போட்டியிட போவதால், அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது தான் உச்சபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தை பொறுத்த வரை காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. இந்த இழுபறி நிலைக்கு காரணமே வாரணாசி தொகுதி யார் என்பது தான் என சொல்லப்பட்டது. 


வாரணாசி தொகுதிக்கு சமாஜ்வாதி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அந்த தொகுதியை கேட்டு பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வாரணாசி தொகுதியை தாரை வார்க்க சமாஜ்வாதி ஒப்புக் கொண்ட பிறகு தான் கூட்டணியே உறுதி செய்யப்பட்டுள்ளது.  சமாஜ்வாதி கட்சியிடம் குறிப்பிட்டு வாரணாசி தொகுதியை பிடிவாத காங்கிரஸ் கட்சி கேட்டு பெற்றுள்ளது என்றால், அங்கு தான் மோடி போட்டியிடுவார் என்பதை காங்கிரஸ் கட்சி நிச்சயம் கணித்திருக்கும். அப்படியானால் காங்கிரஸ் கட்சி சார்பில் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட போகும் அந்த வேட்பாளர் யார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 


கண்டிப்பாக பலமான, செல்வாக்கு மிக்க ஒருவரை தான் வேட்பாளராக நிறுத்தி ஆக வேண்டும். இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியில் அப்படி எவரும் கிடையாது. உ.பி.,யின் ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக இருந்த சோனியா காந்தி, இந்த முறை ராஜ்யசபாவிற்கு சென்று விட்டார். அவருக்கு பதில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது. 


ராகுல் காந்தி, கடந்த முறையும் அமேதி தொகுதியை பாஜக.,வின் ஸ்மிருதி இராணியிடம் இழந்து விட்டார். அதனால் இந்த முறை எப்படியாவது மீண்டும் அதை கைப்பற்ற அமேதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் அமேதி தற்போது பாஜக.,வின் பலமான தொகுதியாக மாறி விட்டதால் ரிஸ்க் எடுத்து அமேதியிலேயே நிற்பாரா அல்லது பாதுகாப்பான வெற்றி முக்கியம் என மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியிலேயே போட்டியிட போகிறாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி முடிவு செய்தால், வட மாநிலங்களை காங்கிரஸ் கை கழுவி விட்டதாக கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும்.


பிரியங்கா காந்தியா.. இல்லை மல்லிகார்ஜுன கார்கேவா?




அரசியல் சூழலை ஆராய்ந்து பார்த்தால் அமேதி அல்லது வயநாட்டிலோ அல்லது கடந்த முறையை போல் இரண்டிலுமோ ராகுல் காந்தி போட்டியிடலாம். இதனால் நேரு குடும்பத்தை சேர்ந்த எவரும் வாரணாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்தால் அது கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடும். மோடி பலமான வேட்பாளர் என்பதால் அவரை எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. 


அதிலும் முதல் முறையாக தேர்தல் அரசியல் களத்திற்கு வரும் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டால் வாரணாசி தொகுதியும் போய் விடும், காங்கிரசின் கோட்டையாக இருக்கும் ரோபரேலி தொகுதியும் காங்கிரஸ் வசம் இருந்து போய் விடும். இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சியில் அனுபவம் வாய்ந்த, வடக்கில் கொஞ்சம் செல்வாக்கான ஆள் என்றால் அது மல்லிகார்ஜூன கார்கே தான். அவர் மோடியை எதிர்த்து களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்