டில்லி : பாஜக.,வின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, இன்று புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். இதனால் பாஜக., விற்கு தேசிய தலைவர் இனி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக., கொள்கையின் படி ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும். அதனால் தான் இதற்கு முன் பாஜக.,வின் தேசிய தலைவர்களாக இருந்த ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அமித்ஷா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்ட போது தங்களின் கட்சி தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டனர்.
குஜராத் பிரதமராக இருந்த நரேந்திர மோடி, தேசிய அரசியலுக்கு வந்து பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான போது ராஜ்நாத் சிங், பாஜக.,வின் தேசிய தலைவராக பதவி வகித்தார். அதன் பிறகு மோடி 2.ஓ- வின் போது அமித்ஷா கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். பின்னர் அமித்ஷாவிற்கு உள்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டு, தேசிய தலைவர் பதவி ஜே.பி.நட்டாவிற்கு வழங்கப்பட்டது.
இன்று பதவியேற்றுள்ள மோடி 3.ஓ அமைச்சரவையில் பாஜக தேசிய கட்சி தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதனால் கட்சியின் புதிய தலைவர் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
கட்சியின் புதிய தேசிய தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கவுகானுக்கு தான் தேசிய தலைவர் பதவி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அவரும் இன்றும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் விதிஷா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கட்டாரும் அமைச்சராகி விட்டார்.
பாஜக.,வின் தேசிய தலைவர் யார் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}