டில்லி : டில்லி முதல்வராக இருக்கும் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அப்படி அவர் ராஜினாமா செய்தால் அடுத்து யார் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக பல விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போலி மதுபான வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு செப்டம்பர் 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல் வேளையாக தனது ராஜினாமாவை அறிவித்தார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் கூறுகையில், இன்னும் இரண்டு நாட்களில் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிப்பு, சான்று வழங்கும் வரை அந்த நாற்காலியில் நான் அமர மாட்டேன். டில்லி தேர்தல் விரைவில் வரும். நான் சட்ட ரீயதிான கோர்ட்டில் இருந்து நியாயம் பெற்று விட்டேன். தற்போது மக்களின் கோர்ட்டிலும் நீதியை பெற போகிறேன். மக்கள் தீர்ப்பளித்த பிறகு தான் முதல்வர் பதவியில் நான் மீண்டும் அமர்வேன் என தெரிவித்தார்.
இதோடு தனது கட்சி எம்எல்ஏ.,க்களை சந்தித்து கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும், முன் கூட்டியே தேர்தலை எதிர் கொள்வது குறித்தும் ஆலோசிக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். டில்லி.,க்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்பது ஒரு புறம் இருந்தாலும், கெஜ்ரிவாலின் இந்த முடிவால், சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தற்காலிக முதல்வர் என யாராவது இருக்க வேண்டும் என்பதால் கட்சியில் இருக்கும் யாரையெல்லாம் கெஜ்ரிவால் அறிவிக்க வாய்ப்புள்ளது என சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவருமே கெஜ்ரிவாலின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்பதால் இவர்களில் யாரை புதிய முதல்வராக கெஜ்ரிவால் அறிவிப்பார் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை கவர்னரிடம் வழங்குவதற்கு முன்பு புதிய மற்றும் தற்காலிக முதல்வர் யார் என்பது பற்றி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம், கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் அளித்த உடன் ஆட்சியை களைக்க எதிர்க்கட்சிகளும், விரைவில் தேர்தலை அறிவிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சியிலும், டில்லி அரசியல் வட்டாரத்திலும் அடிபடும் பெயர்கள் என்றால் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், சுனிதா கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. டில்லியில் தற்போது நடந்து வரும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வரை உள்ளது. ஆனால் கெஜ்ரிவாலின் இந்த முடிவால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே டில்லிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}