விஜய்க்குப் பிறகு.. தமிழ்த் திரையுலகின் அடுத்த தளபதி யார்.. இனி 500 கோடி வசூல் சாத்தியமா?

Mar 11, 2025,02:41 PM IST

சென்னை: தமிழ்த் திரையுலகில் சூப்பர் நடிகர்களின் சகாப்தம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வருவது திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


தற்போதைய சூழலில்  ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவருக்குத்தான் மிகப் பெரிய வசூல் வாய்ப்புகள் உள்ளன. இதில் ரஜினிகாந்த்தின் சமீபத்திய படங்கள் சில வசூலை வாரிக் குவிக்கத் தவறி விட்டன. விஜய் மட்டும்தான் தொடர்ந்து வசூலைக் குவித்து வரும் நடிகராக இருந்தார். தற்போது அவரும் திரையுலகை விட்டு விலகவுள்ளதால் இனி  500 கோடி, 600 கோடி வசூல் எல்லாம் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த்தின் இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வியும், போட்டியும் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அந்த இடத்தை கடுமையாக போராடி விஜய் பிடித்தார். தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் ராஜாவாக சில காலமாக அவர் வலம் வந்து கொண்டுள்ளார். அவரது படங்களுக்கு மிகப் பெரிய ஓப்பனிங் உள்ளது, வசூலும் பெரிய அளவில் உள்ளது.




தமிழ் திரைப்பட உலகில் "தளபதி" விஜய், தனது தனித்துவமான நடிப்பு, அசைக்க முடியாத ரசிகர் ஆதரவு, மற்றும் வெற்றிகரமான படைப்புகளால் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர். இன்று வரை அதிக வருமானம் ஈட்டும் முன்னணி நடிகராக திகழும் விஜய்க்கு, தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்து இருக்கிறது.


இப்போது முக்கியமான கேள்வி .. நடிகர் விஜய்க்குப் பிறகு அந்த இடத்தை யார் பிடிக்கப் போகிறார்கள்? என்பதுதான்.  விஜய் தனது கடைசிப் படத்தில் நடித்து வருகிறார். ரஜினி இடத்தை விஜய் பிடித்தது போல, விஜய் இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி சூடு பிடித்துள்ளது.  அதற்கான வாய்ப்புள்ளவர்கள் குறித்து பார்ப்போம்.


சிவகார்த்திகேயன் 




சிவகார்த்திகேயனை, விஜய்யின் வாரிசாக பலரும் பார்க்கிறார்கள். விஜய்யைப் போலவே படிப்படியாக கடுமையாக உழைத்து முன்னேறி வந்தவர் சிவகார்த்திகேயன். விஜய்யைப் போலவே அவரது அமரன் படம் 3 டிஜிட் அளவுக்கு வசூலை வாரிக் குவித்ததன் மூலம் முதல் வரிசை நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவரது வளர்ச்சி மிக மிக அசாதாரணமானது. 


விஜய் போலவே அனைத்துத் தரப்பு ரசிகர்களின் அன்பையும் பெற்றவராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், குடும்ப ஆடியன்ஸ் என அனைத்துத் தரப்பிலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு காணப்படுகிறது. 


காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், டான்ஸ் என அனைத்திலும் கலக்குகிறார் சிவகார்த்திகேயன். அவரது பல வெற்றிப் படங்கள், அவர் மாஸ் ஹீரோவாக மாறும் பாதையில் இருப்பதை நிரூபித்து வருகின்றன. தற்போது உள்ள தனது மார்க்கெட் ஸ்டேட்டஸை மேலும் வலுப்படுத்திக் கொண்டால் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்பக் கூடும்.


தனுஷ்




தமிழ் சினிமாவில் வசூல் ராஜாவாக வலம் வரும் இன்னொரு நடிகர் தனுஷ். நடிகராக, இயக்குநராக, பாடகராக, பாடலாசிரியராக என பல அவதாரம் கொண்டிருப்பவர் தனுஷ். அகில இந்திய அளவில் அறிமுகம் ஆன நடிகரும் கூட. இந்தியிலும் நடித்துள்ளார். ஆங்கிலத்திலும் நடித்துள்ளார்.


வித்தியாசமான ரோல்களில் நடித்து தன்னை ஒரு முழுமையான நடிகராக அடையாளம் காட்டியவர் தனுஷ். அசுரன், மாரி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்கள் மூலம்  அசரடித்தவர். இயக்குநரகாவும் சூப்பர் ஹிட் படங்களைக்  கொடுத்துள்ளார் தனுஷ்.


நல்ல கதையைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி மற்றும் வசூல் படங்களைக் கொடுத்தால் இவருக்கும் விஜய் விட்டுச் செல்லும் மகுடம் அலங்கரிக்க வாய்ப்புள்ளது.


இந்த இருவரைத் தவிர வேறு யாரையும் தற்போது சூப்பர் டூப்பர் ஹீரோ இடத்தில் வைத்துப் பார்ப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. காரணம், இந்த இருவரைத் தவிர மற்றவர்கள் பெரிய அளவில் வசூல் சாதனையாளர்களாக இன்னும் உருவெடுக்கவில்லை.


சிம்பு ஸ்டெடியாக நடிப்பதில்லை. ஒரு ஹிட் கொடுக்கிறார். அடுத்து பெரிய கேப் விடுகிறார். எனவே அவர் மிகப் பெரிய ஹீரோவாக உயர முடியாமலேயே இருக்கிறது. இவர்கள் தவிர ஹரீஷ் கல்யாண் தற்போது நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து ஸ்டெடியாக போனால், சிவகார்த்திகேயன் இடத்தை அவர் பிடிக்கக் கூடும். ஆனால் அங்கும் பிரதீப் ரங்கநாதன் மூலமாக அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


விஜய் சேதுபதி, ரவி மோகன், கார்த்தி, சூரியா, அதர்வா என பல நடிகர்கள் இந்த லிஸ்ட்டில் சேர்க்கக் கூடியவர்கள்தான். ஆனால் தொடர் வெற்றிகளைத் தரத் தவறுவதால் இவர்களை அதி உயர் ஸ்டார் வளையத்திற்குள் கொண்டு செல்ல முடியாத நிலையே நிலவுகிறது.


நீண்ட காலமாக  நிலவி வந்த அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம், இனி அடுத்த தளபதி யார் என்ற விவாதமாக மாறப் போகிறது.. ஆனால் இந்த விவாதம் நீண்ட காலம் நீடிக்குமா அல்லது சீக்கிரமே அதற்கு விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்