லோக்சபா தேர்தல் 2024 தேதி அறிவிப்பு எப்போது ?.. தேர்தல் கமிஷனின் தாமதத்திற்கு இது தான் காரணம்!

Mar 15, 2024,10:15 AM IST

டில்லி : அரசியல் கட்சிகள் மட்டுமல்ல நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய விஷயம் லோக்சபா தேர்தல் 2024 தேதி பற்றிய அறிவிப்பை தேர்தல் கமிஷன் எப்போது வெளியிடப் போகிறது என்பது தான். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பு பற்றி தேர்தல் கமிஷன் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 


2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான தேதி அந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது செயலாற்றி வரும் 17வது லோக்சபாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய அரசும் பொறுப்பேற்க வேண்டும். 


லோக்சபா தேர்தல் இந்த தேதியில் நடக்க போகிறது, அந்த தேதியில் நடக்க போகிறது என வாட்ஸ்ஆப், சோஷியல் மீடியா என பல விதமாக தகவல் பரவி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் பொய்யானவை. தேர்தல் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என்று மட்டும் தான் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக கூறி உள்ளதே தவிர இதுவரை தேர்தல் தேதி பற்றியும், தேதி அறிவிக்கப்படும் நாள் பற்றியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 




முதலில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடாததற்கு புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கபடாமல் இருந்தது தான் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் நேற்று இரண்டு தேர்தல் கமிஷனர்களையும் மத்திய அரசு நியமித்து விட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பு வந்த பாடில்லை. தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் படி, இந்த வாரத்தில் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


2019ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தான் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. எல்லாம் ஓகே. ஆனால் தேர்தல் தேதியை எப்போ அறிவிப்பாங்க? ஏன் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இன்னும் தேர்தல் கமிஷன் தாமதிக்கிறது? இதற்கு பின்னால் மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறதா? என்றொல்லாம் பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் இவை எதுவுமே தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாவதற்கு காரணம் கிடையாது. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு தான் காரணம்.


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை உறுதி செய்யும் வரை 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை சட்டசபை தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் கமிஷன் குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த குழு டில்லி திரும்பிய பிறகு, அதாவது இன்னும் ஓரிரு நாட்களில் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்