"வீல் சேர்தான்.. So what?.. நான் டான்ஸ் ஆடுவேன்".. பிரதமர் மோடியைப் பார்த்து உற்சாகமடைந்த பெண்!

Feb 13, 2024,08:41 PM IST

அபுதாபி: பிரதமர் நரேந்திர மோடியைக் காண துபாயிலிருந்து அபுதாபிக்கு வந்திருந்த ஒரு பெண்.. தனக்கு டான்ஸ் ஆட வேண்டும் போல அத்தனை உற்சாகமாக இருப்பதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா.. இருக்கிறதே.. அந்தப் பெண் நடக்க முடியாதவர்.. வீல்சேரில்தான் அவர் விழா நடந்த இடத்திற்கு வந்திருந்தார்!


பிரதமர் நரேந்திர மோடி இன்று அபுதாபிக்கு வருகை தந்தார். அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகம்மது பின் ஜாயேத் அல் நஹியான் வரவேற்றார். இருவரும் கட்டித் தழுவி பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். பிரதமர் மோடிக்கு, அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.




மோடி பயணத்தின் ஒரு பகுதியாக, அபுதாபி ஜாயேத் ஸ்டேடியத்தில் அஹலான் மோடி (அதாவது ஹலோ மோடி) என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் இந்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 65,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஸ்டேடியத்தில் குவிந்துள்ளனர். 


இதில் கலந்து கொள்ள வந்தவர்களில் ஒருவர்தான் அந்தப் பெண்.  இவர் துபாயில் வசித்து வருகிறார். வீல்சேரில் வந்திருந்த இவரிடம் செய்தியாளர் ஒருவர் பேசியபோது, நான் இந்தியாவை மிகவும் ஆழமாக நேசிக்கிறேன். கடந்த 48 வருடமாக நான் இங்கிருக்கிறேன். ஆனாலும் எனது மனசு முழுவதும் இந்தியம்தான் நிரம்பியுள்ளது. எனக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. என்னால் நடக்க முடியாது. ஆனால் அது முக்கியம் இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.




இங்கு வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். எனக்கு டான்ஸ் ஆட வேண்டும் போல உள்ளது. வீல் சேரிலேயே ஆடிக் கொள்வேன்.. கடந்த 2 நாட்களாகவே இந்த நிகழ்ச்சிக்காக பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தேன். எனது நகத்தைப் பாருங்கள்.. எனது மோதிரத்தைப் பாருங்கள்.. எனது குங்குமத்தைப் பாருங்கள்.. எனது ஸ்கார்ப்.. மொத்தமாக ஒரு இந்தியராக வந்திருக்கிறேன் என்று உற்சாகமாக பேசினார் அப்பெண்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். அந்த நாட்டில் அரபு மக்களுக்கு அடுத்து, அடுத்த பெரிய இனக் குழு இந்தியர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்