ஒட்டாவா : கனடா நாட்டின் பிரதம் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதனால் அங்கு அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் அனைத்தும் ஆர்வமாக கவனித்து வருகின்றன.
2013ம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து தலைவராக நீடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் உட்கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் 31ம் தேதி நானோஸ் நடத்திய ஆய்வில், கன்சர்வேடிவ் கட்சி 26 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 46.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே சமயம் ஆளும் லிபரல் கட்சிக்கு மிக குறைந்த அளவே ஆதரவு கிடைத்திருந்தது. ஜஸ்டினின் ராஜினாமாவிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தன்னுடைய பதவி விலகலை அறிவித்த ஜஸ்டின், கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அந்த பதவியில் நீடிக்க உள்ளேன். அதற்கு பிறகு முறையாக என்னுடைய ராஜினாமாவை செய்ய உள்ளேன். கனடாவின் மிக நீண்ட வரலாற்றில் சிறுபான்மை பார்லிமென்ட் காரணமாக பல மாதங்களாக பார்லிமென்ட் முடங்கி உள்ளது. கவர்னர் ஜெனரலுக்கு புதிய பார்லிமென்ட் கூட்டத் தொடர் தேவை என அறிவுறுத்தினேன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு. மார்ச் 24 வரை நாடாளமன்றத்தை அவர் ஒத்திவைத்துள்ளார் என்றார்.
53 வயதாகும் ஜஸ்டினுக்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு இல்லாத நிலை பல காலமாக இருந்து வந்தது. அது மட்டுமின்றி தற்போதைய சூழலில் கனடாவில் தேர்தல் நடைபெற்றால் லிபரல் கட்சி நிச்சயம் படுதோல்வியையே அடையும். இப்போது வரை புதிய கனடா பிரதமராக யாரை தேர்வு செய்ய போகிறார்கள் என்பது குறித்த எந்த தெளிவான முடிவும் எட்டப்படவில்லை. புதிய பிரதமரையும், கட்சியின் தலைவரையும் தேர்வு செய்யும் வாய்ப்பு லிபரல் கட்சிக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஜஸ்டின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளதால் கட்சியின் தலைவராக இல்லாத ஒருவராக எப்படி பிரதமராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் இடைக்கால பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. யாராவது ஒருவரை பரிந்துரை செய்யலாம் அல்லது ஓட்டெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போது கனடாவின் நிதியமைச்சராக இருக்கும் டோமினிக் லிபிளான்க் லிபரல் கட்சியின் இடைக்கால தலைவராகவும், கனடாவின் இடைக்கால பிரதமராகவும் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!
இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன்.. மகிழ்ச்சி தரும் செய்தி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Erode East.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா.. புறக்கணிப்பா.. ஜனவரி 11ல் முக்கிய முடிவு!
Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன.. போட்டியிடுமா? போட்டியிடாதா?
{{comments.comment}}