2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

Nov 09, 2024,04:56 PM IST

வாஷிங்டன்:   அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்றுள்ள கமலா ஹாரிஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டுள்ளது.


அமரிக்க துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் இன்னும் 72 நாளில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது பின்னர் அப்படியே மங்கிப் போய் விட்டது. தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியுற்றார்.


தான் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக் கொள்வதாக கூறிய கமலா ஹாரிஸ், ஆனால் வீழ்ந்து போக மாட்டேன். தொடர்ந்து போராடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் அவரது எதிர்கால திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




அனேகமாக அவர் 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருப்பதாக ஒரு கருத்து உலா வருகிறது. சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு 2028 தேர்தலில் போட்டியிட அவர் ஆயத்தமாவார் என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற உதாரணங்கள் உள்ளன. அதாவது ஜான் கெர்ரி, 2004 தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோல்வியடைந்தார். இருந்தாலும் அவர் அப்படியே ஓய்ந்து போய் விடவில்லை. மாறாக, பின்னர் வந்த பராக் ஒபாமாவின் 2வது ஆட்சிக்காலத்தில் ஜான் கெர்ரி வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.


அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஜான் கெர்ரி செனட் உறுப்பினராக வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தார். அதேபோல கமலா ஹாரிஸும் செய்வாரா  என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே கமலா ஹாரிஸுக்கு எதிர்ப்பும் இருப்பதால் இதெல்லாம் சுலபமானதாக தெரியவில்லை.


கமலா ஹாரிஸின் உடனடித் திட்டம் ஒரு சுய சரிதை எழுதுவதாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப்பிடம் 2016 தேர்தலில் தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன் ஒரு புத்தகம் எழுதினார். அதேபோல அல் கோரும் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் ஒரு புத்தகம் எழுதினார். கமலாவும் எழுதுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


கமலாவின் அடுத்தடுத்த திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை 72 நாட்கள் கழித்தே நாம் அறிய முடியும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் 57,000த்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி.. இப்படியே போனால் எப்படி!

news

சீனாவுக்குப் போகும்.. தமிழர்களின் மனம் கவர்ந்த மகாராஜா.. விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

Ramanathapuram Rains: ராமநாதபுரத்தை வச்சு செய்த மேக வெடிப்பு.. மழை தொடருமாம் மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்