Appendicitis வந்துருச்சே என்ன செய்வது.. என்ன சாப்பிடுவது.. கவலைப்படாதீங்க. இதை பாலோ பண்ணுங்க

Mar 22, 2025,04:30 PM IST

சென்னை: அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் அழற்சி வந்து விட்டாலே பலரும் பயந்து போய் விடுகிறார்கள். பயமெல்லாம் தேவையில்லைங்க. மாறாக, உரிய சிகிச்சை மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றினாலே போதும். இதிலிருந்து மீண்டு வரலாம்.


அப்பன்டிசைடிஸ் ஏற்பட்டால் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். வீக்கம் மற்றும் வலி குறையவும், செரிமானத்தை சுலபமாக்கவும், நோய்க்குறிகளை மேலோங்க விடாமல் இருக்கவும் எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது முக்கியம்.


பொதுவாகவே வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தாலே, செரிமானம்தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை எப்போதுமே எடுத்துக் கொள்வதும் கூட சிறந்தது. சரி இப்போது அப்பன்டிசைடிஸ் வந்தால் என்னெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.




உடம்புக்கு சரியில்லாவிட்டால் டாக்டர்கள் நமக்குப் பரிந்துரைப்பது கஞ்சிதான். கஞ்சி என்றால் அரிசி, சாமை, கம்பு போன்றவற்றை கஞ்சியாக்கி சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாகும்.


சத்தான சூப்புகள் சாப்பிடலாம். அதாவது காய்கறி சூப் போன்றவை சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான சத்தைத் தரும். கூடவே செரிமானமும் எளிதாக இருக்கும்.


எளிதாக ஜீரணிக்கக்கூடிய பழச்சாறுகள் அருந்தலாம். பொதுவாகவே பழச்சாறுகள் உடலுக்கு நல்லது. மாம்பழம், திராட்சை போன்ற பழச்சாறுகள் பருகலாம்.


நன்கு வேகவைத்த உணவுகளையே எப்போதும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது மசிந்து எளிதாக ஜீரணமாகக் கூடிய வகையில் இருக்கும். வெள்ளரிக்காய், பூசணி, தக்காளி போன்ற காய்கறிகளை வேகவைத்து சாப்பிடலாம்.


வெந்தயக் கஞ்சி அல்லது ராகி களி போன்றவையும் கூட உடலுக்கு நல்லது. மீன், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர் அதிகமாக உள்ள உணவுகளையும் சாப்பிடலாம்


அதிக அளவில் வெந்நீர், இளநீர், பார்லி கஞ்சி ஆகியவற்றையும் தேவையான அளவுக்கு அருந்தலாம்.  தயிர், மோர், இஞ்சி நீர்,  சிறிதளவு பாலுடன் வெந்தயப் பொடி போன்றவையும்  போதிய அளவு எடுக்கலாம். மோர் மிக மிக நல்லது.


தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்


மசாலா, காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  நன்றாக வெந்த பொரியல்கள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


சோளம், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற வாயு உருவாக்கும் உணவுகளையும் கூட தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கையும் தவிர்க்கலாம். 


காஃபீன், கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்து (Iron) கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.


முக்கிய அறிவுரை


தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும். சாப்பாட்டை மொத்தமாக சாப்பிடாமல், சிறு சிறு அளவுகளில் உணவுகளை உட்கொள்ளவும். அதாவது காலையில் 8 மணிக்கு கொஞ்சம், 12 மணிக்குக் கொஞ்சம், 4 மணிக்கு, பிறகு இரவு 8 மணிக்கு என பிரித்து சாப்பிடுவதை பின்பற்றலாம்.


எந்த வகையான உணவு சாப்பிட்டாலும் உரிய மருத்துவர் ஆலோசனைப்படி உணவுமுறையை கடைபிடிப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்