அடேய் சூரியா.. டெம்பரேச்சரை கொஞ்சம் குறைக்கக் கூடாதா.. மக்களே இதையெல்லாம் எடுத்துக்கங்க.. நல்லது!

Apr 10, 2024,05:54 PM IST

கோடைக்காலம் தொடங்கி விட்டது. வெயிலின் தாக்கம் இப்பவே விஸ்வரூபம் எடுத்து உடம்பெல்லாம் வியாபித்து வியர்த்துக் கொட்டுகிறது. ஏன்டா ஏன் என்று எல்லோரும் சூரியனைப் பார்த்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் புழுக்கமும் மக்களின் புலம்பலும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மக்கள் வெளியில் செல்ல முடிவதில்லை.


சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும் நகரங்கள் என்று மக்கள் மீம்ஸெல்லாம் போட்டு விளையாட ஆரம்பித்துள்ளனர். வெயில் ஏற ஏற இப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது.. என்ன செய்வது.. சூரியன் அவன் கடமையை செய்றான்.. நாம  அதை நினைச்சுப் புலம்பாம, அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று பார்த்துப் பொழச்சுக்கணும்.. அதான நம்ம கடமை.. நாம அதை கரெக்டா செய்வோம்.




கோடைக்காலத்தில் நம் உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு சில உணவு பொருட்கள் பயன்பாடு மிக அவசியம். சமுக  வலைதளங்கள் தாக்கம் தான் மக்களை அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிபி, இன்னைக்கு என்ன சமையல் என்று குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ் முதல் பெரியவர்கள் வீட்டின் உணவு வரை உள்ள ரீல்ஸ்கள் தற்போது வைரலாகிறது. கிராமப்புறங்களில் மண்பானை தண்ணீர், பழைய சோறு, என்று வெயிலின் தாக்கத்தைத் தணிக்க பல வழிகளை கையாளுகிறார்கள். நகர்புறங்களில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க ஒன்று ஏசிக்குள் புகுகிறார்கள் அல்லது கூல் டிரிங்ஸ் பக்கம் குவிகிறார்கள்.. அதையும் விட்டால், வலை தளங்களில் என்னவெல்லாம் சிறந்த உணவு பொருள்கள் என்று தேடித் தேடி அதை சாப்பிட்டுப் பார்க்கிறார்கள்.  நாமும் அதை கொஞ்சம் இங்கே பார்ப்போம்.


வெள்ளரி .. இது இயற்கை நமக்குக் கொடுத்துள்ள ஒரு அருமையான காய். உடம்பைக் குளிர்ச்சியா வைத்துக் கொள்ள உதவும். வெயில் காலத்தில் நிறைய வெள்ளரிக்காய் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.. ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இது உதவும்.


அது போல் குடிநீரில் ஐஸ் வாட்டர் பயன்படுத்துவதை விட்டு விட்டு நன்னாரி சர்பத், சீரக தண்ணர், வெந்தய தண்ணீர், போன்றவற்றை குடிக்கலாம். இப்பொழுது ரசாயன குளிர் பானங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதற்கு பதில் இளநீர்,  பனை நுங்கு,   போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம். அது உடல் சூட்டை தணிப்பதுடன் ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படுகிறது. 


பெரும்பாலான குழந்தைகள் விரும்புவது ரசாயனங்கள் சேர்த்த உணவு பொருள்கள்தான். அதற்கு பதில் நல்ல இயற்கையான முறையில் பழுத்த பழங்களை அவர்களுக்கு பிடித்தமான முறையில் ஜூஸ் போட்டோ அல்லது மில்க்ஷேக்காகவோ தயாரித்துக் கொடுக்கலாம். குறிப்பாக வாழைப்பழ ஐஸ் கிரிம், பேரிச்சம்பழ லட்டு போன்றவை சில உதாரணங்கள். 


கோடைக்காலங்களில்  நமது உடலுக்கு அதிகம் தேவையானது நீர்ச்சத்து தான். நீர் மோர், பானகம் இது இரண்டுமே நமது உடலின் வெப்பத்தை தணிக்கிறது. அது மட்டுமல்லாமல் சில பழங்களும் ஆரோக்கியத்தை  மேம்படுத்த உதவும். கொய்யாப்பழம் நல்லது. விட்டமின்  சி இதில் இருக்கிறது. ஆப்பிள் , திராட்சை, முலாம் பழம், மாம்பழம்,  தர்பூசணி இவையும்  கோடைக்காலத்தில் நமக்கு நலம் பயக்கும். இதன் மூலம் நமக்கு உடம்பில் நீர் சத்துடன் மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.




அதேபோல வெயில் காலத்தில் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அது என்னென்ன தெரியுமா.. காரம் நிறைந்த மசலா பொருள்கள் , பர்க்கர், பாஸ்புட்,  உடலுக்கு அதிகம் வெப்பம் சேர்க்கும் பொருள்களை தவிர்க்கலாம். உடம்பிற்கு குளிர்ச்சியை அதிகம் தருவது உளுந்து ஆகும். இதனால்தான் கிராமப்புறங்களில் உளுந்து சோறு , உளுந்து கஞ்சி , உளுந்தகளி என்று சாப்பிடுகிறார்கள். இது பெண்களுக்கு கர்ப்பப்பையை பலபடுத்த உதவும். வெந்தைய களியும் செய்து சாப்பிடலாம். இதுவும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.


கம்பங்கூழ், கேப்பைக்கூழ், ராகி போன்றவையும் உடலுக்கு நல்லது. உடல் சூட்டைக் குறைக்க உதவும். இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் இதை பாக்கெட் போட்டு விற்கிறார்கள்.. வெயில் இப்போதைக்குக் குறையாது.. நாம்தான் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.. உங்களையும் பாத்துக்கங்க.. அப்படியே உங்க  வீட்டு குட்டிஸ்களுக்கும் ஆரோக்கியமான உணவுகள் பானங்களைக் கொடுங்க.. ஏன்னா, அவங்களா எதுவும் சாப்பிட மாட்டாங்க.. விளையாட்டு ஜோரில்தான் இருப்பார்கள்.. நாமதான் பார்த்துப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.. வெயிலை சந்திப்போம்.. வெல்வோம்..!


கட்டுரை: சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்