Women's Day: "பெண்களோட நிலைமை ரொம்பவே மாறிருச்சு.. 90% முன்னேற்றம் ஆயிருக்கு"!

Mar 08, 2024,09:53 PM IST

சென்னை:  சர்வதேச மகளிர் தினம் இன்னிக்குக் கொண்டாடப்படுது. எங்கு பார்த்தாலும் இதுகுறித்த ஸ்டேட்டஸ், கட்டுரைகள், கவிதைகள்தான். 


மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த நிலையில், பெண்களோட நிலைமை எப்படி இருக்கு.. அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?.. பெண்களின் இன்றைய நிலை மற்றும் பெண்கள் தினம் கொண்டாடுவது குறித்து இன்றைய பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பெண்களிடமே கேட்டோம்.. அவர்கள் சொன்ன பதில்களைப் பார்க்கலாமா!


ஸ்ரீவித்யா (படிப்பு - பி.காம் - வயது - 51 - இல்லத்தரசி)




முன்னாடி இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. அடிப்படை உரிமை கிடைத்துள்ளது. பெண்களுக்கு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கிடைத்துள்ளது. பெண்கள் வெளியில் வர கூட முடியாமல் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. பல்வேறு தடைகள் இருந்தாலும் படிப்பின் காரணமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். பிரச்சினைகளில் முன்னாடி சிக்கித் தவித்தனர் .இப்பெல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர். 


கல்வி இருப்பதினால் நல்லது கெட்டது என்று ஆராய்ந்து முடிவு எடுக்கின்றனர். படிப்பினால் நல்வழி படுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். இது மட்டும் இன்றி வீட்டையும் வேலை செய்யும் இடத்திலையும் பேலன்ஸ் பண்ணும் நிலையில் உள்ளனர். முன்பெல்லாம் ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பார்ப்பதற்கு சிரமப்பட்டனர். இப்போது இருவரும் சேர்ந்து  பிளான் செய்து குழந்தைகளை இருவருமே சேர்ந்து பார்த்துக் கொள்கின்றனர். 


திருமண வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே பிளான் செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்து வருகின்றனர். 100 பேரில் 10 பேரின் வாழ்க்கை நிலை முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் மீதம் இருக்கும் 90 பேர்களின் வாழ்க்கை நிலை தற்பொழுது முன்னேற்றம் அடைந்துள்ளது.


பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான். முன்னர் எல்லாம் பெண்கள் உடன்கட்டை ஏறும் மற்றும் ஏற்றிவிடும் நிலை இருந்தது. அதன் பின்னர் தலையை மொட்டை அடித்து, வெள்ளை புடவை உடுத்தி தலையில் முக்காடு போட்டு வாழ்த்து வந்தனர். இந்த நிலை என் பாட்டிக்கு நடந்தது. இப்பொது அந்த நிலை மாறியுள்ளது. 


புரட்சிகரமான போராட்டங்களினால் கணவன் இருந்துலும் சரி இல்லை என்றாலும் சரி குடும்பத்தை பார்க்கும் நிலைக்கு வளர்ந்துள்ளனர். நல்லா படித்துள்ளார்கள். பிரச்சனைகளை கையாள பழகி விட்டனர். இந்த மாதிரி முன்னேறனும்னா பெண்கள் எல்லாம், ஒரு 10 பேர் கூடி தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை பேசி தீர்வு கண்டால் இன்னும் நன்றாக இருக்க முடியும். அப்ப தான் நாம் வெளி உலகிற்கு இன்னும் அதிக அளவில் வர முடியும். 


இது ஆண்களிடம் இருக்கிறது. அது நார்மலாகவே ஆண்கள் பின்பற்றுவது தான் இது. சின்ன சின்ன என்கரேஜ்மென்ட் இருந்தா தான் பெண்கள் முன்னேற முடியும். இந்த பெண்கள் தினம் கொண்டாடுவது  மூலம் யார் யார் எப்படி இருந்து இப்ப இப்படி வந்திருக்கிறார்கள். இன்னும் என்ன மாதிரியெல்லாம் செய்தால் நாம் இன்னும் முன்னேற முடியும். எப்படி நம்ம பிள்ளைகளை வளர்த்தால் எப்படி முன்னுக்கு கொண்டு வர முடியும் என்பதனை தெரிந்து கொள்ளலாம். எந்த எந்த நாளையெல்லாம் கொண்டாடும் போது பெண்கள் தினம் கொண்டாடினால் என்ன தப்பு.


மைதிலி (வயது - 74 - படிப்பு - 8 - சமையல் வேலை)


பெண்கள் எல்லாம்  வேலைக்கு போய் இப்பெல்லாம் தைரியமாக இருக்கிறாங்க. எங்க காலத்துல எல்லாம் பேசவே முடியாது. வீட்டுக்குள்ளயே அடங்கித்தான் இருக்கனும். பொருளாதாரம்னு வந்தா ஆண்கள் கையைத்தான் நம்பி இருக்கும் நிலை இருந்தது. அதுனால அடங்கி ஒடுங்கி தான் இருந்தாங்க. இப்ப அப்படி எல்லாம் கிடையாது. பெண்கள் எல்லாருக்கும் சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனாலும் பெண்கள் கொஞ்சம் ஓவரா தான் இருக்காங்க, கையில் காசு இருக்குனு கொஞ்சம் ஆடுறாங்க.  காசு பணம் வந்ததுக்கு அப்புறம் பயம் விட்டுப்போச்சு. எல்லாம் ஐடி கம்பெணிக்கு வேலைக்கு போறாங்க கையில் காசும் நிறையா வச்சு இருக்காங்க. யாரையும் ஒரு சிலர் மதிக்க மாட்டேங்கிறாங்க. 


ஆஸ்டெட் மேரி  (படிப்பு- பிஹச்டி  - வயது - 42  - கல்லூரி பேராசிரியர்)


முன்பு இருந்த காலத்தை விட தற்பொழுது பெண்களின் நிலைமை உயர்ந்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரமும்  உயர்ந்துள்ளது. நிர்வாக திறமை எல்லாம் வெளிப்படுகிறது. பெண்களுக்கு ஒரு நல்ல காலமாக தான் தற்போதைய காலம்  இருக்கிறது. பெண்கள் மெச்சூரிட்டி பளிச்சிடுவதற்கு நல்ல காலமாக இருக்கிறது. முன்னர் இருந்ததை விட பெண்கள் பல முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். பெண்கள் தினம் கொண்டாடுவது என்பது ஒரு நல்ல விசயம், பெண்கள் தினத்தில் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. எல்லா நாளும் அவர்களை மதிப்புடன் நடத்தினால் நன்றாக இருக்கும். பெண்கள் தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை.


எஸ். சத்தியா (படிப்பு -பி.காம் - வயது-48  - ஆப்ரேட்டர்)


ஆண்களை விட பெண்களின் நிலை தற்போது உயர்ந்துள்ளது. எல்லா விதத்திலயும் முன்னேறி தான் இருக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே இருக்கும் நிலை தான் தற்போது இருக்கிறார்கள். விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் சுயமாக சிந்தித்து முடி எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர். பெண்கள் தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை.  இன்றைய கால கட்டத்தில் பெண்களின் நிலை உயர்ந்து தான் உள்ளது. பெண்கள் தாங்கள் நினைத்த துறைக்கு சொல்ல முடிகிறது.


பி.மகேஸ்வரி (படிப்பு: பி.காம் - வயது -30 - வங்கி மேலாளர்)


முன்னாடி விட இப்ப முன்னேற்றம் இருக்கு. அவர்கள் காலில் அவர்கள் நிற்கும் நிலை வந்துள்ளது. குடும்பத்தில் கஷ்டம் என்றால் வேலைக்கு போய் தங்களால் முடிந்த பண உதவி செய்ய முடிகிறது. யாரையும் சார்ந்து இருக்கும் நிலை இப்போது இல்லை. குடும்பத்தில் ஆண்கள் தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நிலை மாறி, குடும்பத்திற்கு சப்போர்ட் செய்யும் நிலையும் உள்ளது. ஆண்களுக்கு சப்போர்ட்டாக இருக்க முடிகிறது. பெண்களுக்கு என்று ஒரு நாள் கொண்டாடடுவது பெருமையாக உள்ளது. இந்த கொண்டாட்டம் தேவையான ஒன்று தான்.


ஆர்.கலைவாணி (படிப்பு: 8 - வயது -22 - இல்லத்தரசி)


நான் எங்கும் தனியாக போனதும் இல்லை. அப்படி ஒரு தினம் இருப்பதே தெரியாது. கேள்விப்பட்டதும் கிடையாது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்