ராகுல் காந்தி இன்று என்ன பேசுவார்.. மொத்த தேசமும் டெல்லியை நோக்கி!

Aug 07, 2023,04:06 PM IST
டெல்லி: லோக்சபாவில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் நிச்சயம் பாஜக அரசுதான் வெல்லப் போகிறது. ஆனால் மக்களின் மொத்த பார்வையும் ராகுல் காந்தி மீதுதான் படிந்துள்ளது. ராகுல் காந்தி என்ன பேசப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மணிப்பூர் விவகாரம் ஆரம்பத்தில் தேசத்தின் கவனத்தை ஈர்க்காமல் ஓரம் கட்டப்பட்டு வந்தது. ஊடகங்களும் கூட இதைப் பெரிதாக எழுதவில்லை. பலரும் மணிப்பூர் பற்றி எரிவது குறித்து பதட்டப்பட்டபோதும் கூட அரசு நிர்வாகங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 



இந்த நிலையில்தான் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் வகையிலான 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு இளைஞர் கூட்டம் அழைத்துச் சென்ற வெறிச் செயல் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. இது ஒரு துளிதான்.. இப்படித்தான் நிறைய நடக்கிறது என்று மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் சர்வ சாதாரணமாக சொன்னபோது இதயமே நின்று போய் விட்டது பலருக்கும். குறிப்பாக இந்த நாட்டின் பெண்கள் வெதும்பிப் போய் விட்டனர். வெட்கித் தலைகுணிந்தது தேசம்.

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிரதரமர் நரேந்திர மோடி முதல் முறையாக மணிப்பூர் குறித்து வாய் திறந்து கருத்து தெரிவித்தார். கூடவே அவர் ராஜஸ்தான் மாநிலத்தை மேற்கோள் காட்டிப் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள். மேலும் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசுவார். தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறும். 

வாக்கெடுப்பில் மோடி அரசு நிச்சயம் வெல்லும். காரணம் பாஜக அரசு அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது என்பதால். ஆனால் நாளைய விவாதத்தின் முக்கிய அம்சமாக தற்போது ராகு���்  மாறிப் போய் நிற்கிறார். அவருக்கு மீண்டும் எம்.பி பதவியை கொடுத்துள்ளது சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு. இதை எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கின்றன.



இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி அனல் கக்ககப் போவதை அத்தனை பேரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். எந்த மாதிரி அவரது பேச்சு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே தீப்பொறிகளாகத்தான் இருந்துள்ளன. தற்போது பதவியைப் பறி கொடுத்து சட்ட ரீதியாக போராடி பதவியை மீண்டும் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார் ராகுல் காந்தி என்பதால் அவரது பேச்சில் கூடுதல் காரம் இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

மொத்த தேசமும்  அதிகம் எதிர்பார்த்திருப்பது.. ராகுல் காந்தி என்ற ஒற்றை மனிதரைத்தான்.. பார்க்கலாம், ராகுல் என்ன செய்யப் போகிறார் என்பதை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்