இன்னிக்கு தங்கம் விலை உயர்ந்திருக்கு மக்களே...  எவ்வளவு தெரியுமா?..  இதோ இவ்வளவுதான்!

Jan 19, 2024,12:09 PM IST

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை  காலம் முடிந்தும்  தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. காரணம், பண்டிகை காலம் முடிந்து தற்போது முகூர்த்த மாதமாக தை மாதம் திகழ்வதால், நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5810 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46480 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6305 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50440 ஆக உள்ளது.




தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.77.20 காசாக உள்ளது.  8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 617.60 காசாக உள்ளது. 


தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போவது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன்  காரணத்தினால் விலை உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்