சென்னை : அதிமுக தலைமையில் விரைவில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ள பேச்சால், தமிழக அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும்? அதிமுக அமைத்துள்ள மாஸ்டர் பிளான் என்ன? என பல விதமான கேள்விகள் எழுந்து வருகின்றன.
அதிமுக.,வின் செயற்குழு, பொதுக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று (டிசம்பர் 15) சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "திமுக மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்து விட்டது. திமுக.,வின் கனவு நிறைவேறாது. 2026ல் குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுக., தொண்டர்களே வெறுத்து போய் உள்ளனர். அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. விரைவில் அதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் பிரம்மாண்ட கூட்டணி அமையும்" என்றார்.
மக்கள் விரும்பும் பிரம்மாண்ட கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன என்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய விவாதப் பொருளாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இப்படி கூறி விட்டதால் அதிமுக., விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டதா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அதிமுக கூட்டணி - நடப்பு நிலவரம்
அதிமுக கூட்டணியில் தற்போது வரை தேமுதிக மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட கடைசி நிமிடத்தில் பாமக., விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது. ஆனால் பெரிய அளவில் வாக்குகளையோ, வெற்றியையோ பெறவில்லை. லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமையாமல் போனது தான் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரே ஓபனாக பேசி வந்தனர். இதை அதிமுக-பாஜக கட்சிகளும் நிச்சயம் யோசித்திருக்கும். அதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமிட்டிருக்கலாம்.
சமீக காலமாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோரின் விமர்சனங்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி கருத்துக்களால் அதிமுக-பாமக இரண்டு கட்சிகளுமே திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன. இதனால் பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் மீண்டும் ஒரே கூட்டணியாக இணைய வாய்ப்புள்ளது.
பாமக மீண்டும் இணையுமா
இவர்கள் தவிர விடுதலை சிறுத்தை கட்சிக்கும், திமுக.,விற்கும் சமீப காலமாகவே பல உரசல்கள் இருந்து வருவதாகவும், திமுக.,வின் அழுத்தம் விசிக.,வில் அதிகம் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை திமுக., கூட்டணியில் இருந்து விசிக விலகும் பட்சத்தில், அவரும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் விசிக.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூன், விஜய் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒருவேளை விசிக, திமுக கூட்டணியில் இருந்து விலகாமல் போனாலும், ஆதவ் அர்ஜூன் தவெக.,வில் இணைந்தால் விஜய்- அதிமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிமுகவின் மாஸ்டர் பிளான் என்ன
மறுபக்கம் திமுக அணி தரப்பில் கூட்டணி ஸ்டிராங்காகவே உள்ளது. அதேசமயம், அதிருப்திகள் நிறைய உள்ளன. திமுக மூத்த தலைவர்கள் சிலருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்ததில் மன வருத்தம் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. எனவேதான் வருகிற சட்டசபைத் தேர்தலில் உதயநிதியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல், தேர்தலை சந்திக்க திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதெல்லாம் திமுகவைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையே கிடையாது. சமாளித்து விடும். கூட்டணிக் கட்சிகளும் கூட ஆட்சி அதிகாரம் கிடைத்தால் சந்தோஷம்தான் என்ற மனப்பான்மையில்தான் உள்ளன. இப்படி பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, கூட்டணி இப்போதைக்கு வலுவாகவே உள்ளது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி பிரமாண்ட கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி எந்த நம்பிக்கையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை இன்சைட் தகவல் ஏதேனும் அவருக்குக் கிடைத்திருக்கிறதா.. புதிய பெரிய கட்சி ஏதேனும் கூட்டணிக்குள் வரப் போகிறதா.. அல்லது வேறு ஏதாவது மாஸ்டர் பிளானை அதிமுக., வகுத்து வைத்துள்ளதா என்று தெரியவில்லை.
இருப்பினும் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் ஆவேசம் காட்டிப் பேசியதும் (அவர் பேசிய பல விஷயங்களுக்கு உடனடியாக திமுக பதிலடி கொடுத்து விட்டாலும் கூட அவரது பேச்சு அதிமுகவினைரை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது உண்மை), பொதுக்குழுவில் அவர் பேசிய பேச்சும் கட்சியினருக்கு பெரும் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தைக் கொடுததுள்ளது என்பதை மறுக்க முடியாது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மருத்துவ குப்பைகளை.. லாரியில் எடுத்துச் சென்று கேரளாவில் கொட்டுவேன்.. அண்ணாமலை ஆவேசம்
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
Weather report: 6 மாவட்டங்களில் இன்று கன மழை.. 4 மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கு வாய்ப்பு
கிண்டி மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து..விக்னேஷ்வரனுக்கு ஜாமின்..காவல்துறைக்கு ஹைகோர்ட் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றால் பயம்.. அமைச்சர் கே.என்.நேரு
ரூ. 4.6 கோடி.. வாங்கிய பரிசுப் பணத்தில் கால்வாசியை வரியாக கட்டும் குகேஷ்.. தோனி சம்பளத்தை விட அதிகம்
தங்கம் விலை.. சில நாட்களாக மாற்றமின்றி.. இன்று திடீர் உயர்வு... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட சட்ட மசோதா.. மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாட்டின் பன்முகத்தன்மையை முழுமையாக அழித்து விடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}