சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அமைதி காத்து வருகிறார். அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை. அரசியல் பேசவும் இல்லை. அமைதியாக இருந்து வருகிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவதாக கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் முன்னோடியாக இருந்தவர் டி. ஜெயக்குமார்தான். கடுமையாக பதிலடி கொடுத்து வந்தார். பாஜக வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் முதல் ஆளாக ஜெயக்குமார்தான் விமர்சிப்பார்.
அதிலும் அண்ணாமலைக்கு சரிக்கு சரியாக கருத்துக்களை வைத்து வந்தவர் ஜெயக்குமார். ஆனால் திடீரென பாஜகவுடன் கூட்டு வைக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தது கட்சியின் பல சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதில் ஜெயக்குமாரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் அவர் சைலன்ட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், அவர் அதிமுகவை விட்டு விலகி விட்டதாகவும் தகவல்கள் பரவின.
இதை ஜெயக்குமார் தரப்பு மறுத்துள்ளது. ஒருபோதும் நான் வேறு கட்சியின் வாசலில் போய் நிற்க மாட்டேன். எப்போதுமே அதிமுகதான் என்று ஜெயக்குமார் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், பாஜக கூட்டணி குறித்து ஜெயக்குமார் கருத்து ஏதும் சொல்லவில்லை. அதில் தொடர்ந்து அவர் மெளனம் காக்கிறார். இதன் மூலம் பாஜக கூட்டணி தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதிமுகவில் நீடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 9ம் தேதிக்குப் பிறகு இப்போததான் மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு போட ஆரம்பித்திருக்கிறார் டி.ஜெயக்குமார். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி! சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும் அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா!
இனி எத்தனை நாளை வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு! தமிழ் மக்களின் நலன் காத்த தாயின் ஆணையின்படி சட்ட பேரவை தலைவராக எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}