-ஸ்வர்ணலட்சுமி
சிவபெருமான் ஆயுதமான திரிசூலம் என்பது 1. சத்வம் 2. ரஜஸ் 3. தமஸ் ஆகிய மூன்று குணங்கள் அல்லது பண்புகளை குறிக்கிறது. சத்வம் -நிலைத்தன்மை, தூய்மை ,ரஜஸ் -மாற்றம் சுறுசுறுப்பு ,தமஸ்- மந்தநிலை ,சோம்பலை குறிக்கிறது.
திரிசூலம் மூன்று அம்சங்கள் :திருசூலம் இருப்பின் மூன்று அடிப்படை அம்சங்களை குறிக்கிறது .படைப்பு (பிரம்மா) காத்தல் (விஷ்ணு)*
அழித்தல் (சிவன்)
இது பிரபஞ்சத்தின் சுழற்சி தன்மையை பிரதிபலிக்கிறது .படைப்பு, காத்தல், மற்றும் அழிவு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
திரிசூலம் பெரும்பாலும் பக்தர்களை எதிர்மறை சக்திகள் மற்றும் மாயைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு ஆயுதமாகும் .இது தெய்வீக சக்தி மற்றும் அதிகாரத்தை குறிக்கிறது. திரிசூலம் சிவனின் இருமைகள் மீதான கட்டுப்பாட்டை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ,நன்மை மற்றும் தீமை ,வாழ்க்கை மற்றும் இறப்பு போன்ற எதிரெதிர் சக்திகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தராக அவரது பங்கை குறிக்கிறது.
திரிசூலம் தெய்வீக சக்தி மற்றும் அதிகாரத்தை குறிக்கிறது. டமரு இசைக்கப்படும் பொழுது ஆன்மீக சக்தியை உருவாக்கும் .மேலும் இங்கு டமருகம் அடிப்பதால் சமஸ்கிருத மொழி பிறந்தது என்றும், இது அனைத்து இந்திய மொழிகளும் உருவான முதன்மையான ஓம் என்பதை குறிக்கிறது. உடுக்கையைத்தான் டமருகம் என்கிறோம்.
டமரு என்பது பிரபஞ்ச ஒலியுடன்( நாத பிரம்மா) தொடர்புடையது .இது படைப்பின் தாளத்தை குறிக்கிறது .இது பிரபஞ் சத்தை தொடங்கிய ஒலி யை குறிக்கிறது.
டமரு (டமருகம்):
டமரு இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது இது எதிரெர்களுக்கு இடையிலான சமநிலையை குறிக்கிறது. -ஆண் மற்றும் பெண், படைப்பு மற்றும் அழிவு, மற்றும் வாழ்க்கையின் சுழற்சி இயல்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
தமரு சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய சிவ தாண்டவம் பிரபஞ்சத்தில் படைப்பு மற்றும் அழிவின் மாறும் சக்திகளை குறிக்கிறது. சிவபெருமான் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார் எனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார்கள் என்றும் கருதப்படுகிறது. தனது டமரு உடுக்கையிலிருந்து படைத்தல் ,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான 'ஓம் 'என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
திரிசூலம் மற்றும் டமரு ஆகியவை இணைந்து, வாழ்க்கை ,இறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியை நிர்வகிக்கும் சிவபெருமானின் சாரத்தை வெளிப்படுத்துகின்றன. அவை ஒரு பாதுகாவலராகவும், சக்தியாகவும் படைப்புக்கும் ,அழிவுக்கும் இடையிலான சமநிலையையும் பிரபஞ்சத்தில் எதிரெதிர்களின் இணக்கத்தையும் உள்ளடக்குகின்றன.
'ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய ,ஓம் நமசிவாய'
மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}