அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா.. கேட்டீங்கன்னா ஆச்சரியப்பட்டுப் போயிருவீங்க.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இது உலக கோப்பையை கைப்பற்றும் அணி மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு எவ்வளவு பரிசு தொகை கிடைக்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த போட்டி தொடர் இன்றுடன் நிறைவடையுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எட்டு முறை மோதியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் அந்த அணி பெற்ற வெற்றிக்காக ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 33 லட்சம் என்ற விதத்தில் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
இது மட்டும் இன்றி மொத்த உலகக்கோப்பை தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு தங்க பேட்டும் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலருக்கு தங்க பந்தும் பரிசாக வழங்கப்பட உள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வெல்லும் அணிக்கு பரிசாக ரூ.33 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 16.65 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.
இது தவிர அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா 6.65 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இது போக டாப் 4 இடத்தை அடைய முடியாத மற்ற ஆறு ஆணிகளுக்கும் அதாவது இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் தலா ரூ. 83.17 லட்சம் வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விளம்பரங்கள் மூலமாக மட்டும் ரூ. 16,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
money money.. money money.. everywhere!
{{comments.comment}}