ராஜினாமா செஞ்சாச்சு.. ஆளுநரும் ஏத்துக்கிட்டாச்சு.. அடுத்து என்ன செய்யப் போகிறார் செந்தில் பாலாஜி?

Feb 13, 2024,08:41 PM IST

சென்னை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிந்துரைப்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.


கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை  மூன்று  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. 




இந்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து விலகி தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பிறகு அதிலிருந்து விலகி திமுகவுக்கு வந்து சேர்ந்தார், அமைச்சரும் ஆனார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தூசி தட்டி எடுத்தது அமலாக்கத்துறை.  அவரை இந்த வழக்கில் பல மணி நேரம் விசாரித்து அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை.


கைது செய்யப்பட்ட அவருக்கு பின்னர் இருதய வால்வு அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிறையிலேயே அடைபட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அமைச்சராக நீடித்து வந்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். இதுவே அவருக்கு எதிராக மாறியது. அதாவது அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அவரது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்று ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் ஆர். என். ரவி ராஜினாமாவை ஏற்று இன்று உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துள்ளது. இனி அடுத்து செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




திமுக தரப்பில் அடுத்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க முயற்சிகள் முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது. அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகி விட்டதால் ஜாமீன் கிடைப்பதற்கு இருந்து வந்த பெரிய முட்டுக்கட்டை நீங்கி விட்டதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க திமுக தரப்பு தீவிரம் காட்டும். அதன் பின்னர் சிறிது கால ஓய்வுக்குப் பின்னர் அவரை கொங்கு மண்டல தேர்தல் பணிகளில் திமுக தரப்பு இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டிவாக களத்திற்குப் போய் அவர் பணியாற்றாவிட்டாலும் கூட கோவையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காரணம், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த செந்தில் பாலாஜிதான் பெரிதும் உதவினார்.  அதேபோல லோக்சபா தேர்தலிலும் அவர் அங்கு இருந்தால் நல்லது என்று திமுக கருதுகிறது. இதற்கிடையே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை சும்மா விடுமா அல்லது புதிதாக ஏதாவது தலைவலியைக் கொடுக்குமா என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பும் திமுக தரப்பில் உள்ளது.


செந்தில் பாலாஜி வெளியே வருவாரா.. வந்த பிறகு என்னென்ன நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்