உயர் இரத்த அழுத்தம் (Hypertension).. இந்தப் பிரச்சினை இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இதை கட்டுப்படுத்த சரியான உணவு முறையும், அவற்றை எந்த நேரத்தில் உட்கொள்கிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக காலை உணவு சரியான நேரத்தில், சரியான முறையில் உட்கொண்டால், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம்.
இரவு முழுவதும் நாம் எதுவும் உட்கொள்ளாமல் இருக்கும் நிலையில் காலையில் அதிக கலோரிகளைக் கொண்ட உணவை உடல் எதிர்பார்க்கும். எனவே காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடல் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த முடியாது.
காலையில் உடலில் கூடியிருக்கும் கொர்டிசோல் (Cortisol) ஹார்மோன் அதிகமாக இருந்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலை உணவு உட்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.
உணவின்றி நீண்ட நேரம் நமது உடல் இருந்தால், மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காது, இது மன அழுத்தத்தையும், அதனால் ஏற்படும் இரத்த அழுத்த அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.
காலை உணவின் நேரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடல் நாள்பட்ட நோய்களை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும்.
சிறந்த காலை உணவு நேரம்
அறிவியல் ஆய்வுகளின்படி, காலை 6:30 - 8:30 மணிக்குள் உணவுக் கொண்டால், உடலின் பயோலாஜிக்கல் கடிகாரம் (Circadian Rhythm) சரியாக செயல்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் உடலின் இன்சுலின் எதிர்ப்பு குறைந்து, உணவின் ஊட்டச்சத்து முழுமையாக உறிஞ்சப்படும். இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க உதவும். நீரிழிவு, இருதய நோய்கள் போன்ற குறைபாடுகளைத் தடுக்கும்.
குறிப்பு: சிலருக்கு வேலை நேரம், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் உணவு நேரத்தை மாற்ற முடியாது. இருப்பினும் அவர்கள் 9:00 மணிக்குள் காலை உணவை முடிக்கலாம். ஆனால் 9:30 மணிக்கு மேல் உணவருந்துவது ரத்த அழுத்தத்தில் தவறான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்
காலை உணவிற்கான சிறந்த உணவுகள்
சரி காலையில் என்ன சாப்பாடு சாப்பிட்டால் சரியாக இருக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
ஓட்ஸ் (Oats)
முழு தானிய உணவுகள் (Whole grain cereals)
பழங்கள் (Banana, Papaya, Apple, Orange)
முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகள்
புரதம் நிறைந்த உணவுகள்
முட்டை
முருங்கைப்பூ, பருப்பு வகைகள்
மீன் வகைகள் (Salmon, Mackerel)
நீர்சத்து அதிகம் உள்ள உணவுகள்
குடிநீர் (தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம்)
முருங்கை கஞ்சி
ரசம் அல்லது கூழ் வகைகள்
சரி இதெல்லாவற்றையும் விட சில உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடவே கூடாது. அது எது தெரியுமா?
அதிக உப்பு, மசாலா, எண்ணெய் சேர்த்த உணவுகள்
ஊட்டச்சத்து குறைந்த பொரியல்கள் மற்றும் பசம்பொரிகள்
அதிகமாக காபி அல்லது தேநீர் குடிப்பது
பாக்கெட் உணவுகள், ரொட்டி, வெண்ணெய் போன்றவற்றை காலையில் சாப்பிடவே கூடாது.
{{comments.comment}}