Nayanthara beyond The Fairytale: அக்கா, உங்களுக்கு வெக்கம் மானம் இருக்கா.. ராதிகாவிடம் சீறிய தனுஷ்!

Nov 18, 2024,05:50 PM IST

சென்னை:   தனுஷ் ஆட்சேபித்த காட்சியுடன் நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் டாக்குமென்டரி வெளியாகியுள்ளது. 


நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவரது காதல்  கதை, திருமணம், திரையுலக வாழ்க்கை குறித்த ஒரு டாக்குமென்டரியை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. இந்த டாக்குமென்டரி, நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வெளி வராமல் இருந்தது.




இந்த டாக்குமென்டரியில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், பாடல் காட்சியை சேர்க்க திட்டமிட்டிருந்தார் நயன்தாரா. ஆனால் அதற்கு படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அனுமதி தராததால் இது தாமதமாகி நேற்று நள்ளிரவு வெளியானது.


தனுஷ் வேண்டும் என்றே அனுமதி தராமல் இழுத்தடித்தார். இதனால்தான் இந்த டாக்குமென்டரி வெளியாக தாமதமானது. இந்தக் காட்சிகளை இடம் பெறச் செய்ததற்காக ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றெல்லாம் மிகப் பெரிய அறிக்கை விட்டு தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார் நயன்தாரா. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் நேற்று இந்த டாக்குமென்டரி வெளியானது.


இதில் தனுஷ் ஆட்சேபித்த காட்சி இடம் பெறாது என்றுதான் கூறியிருந்தார் நயன்தாரா. ஆனால் அந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடற்கரையில் நின்று பேசும் காட்சி அது. அதேபோல நடிகை ராதிகா சரத்குமார் தனுஷ்  குறித்துக் கூறிய ஒரு கருத்து இடம் பெற்றுள்ளது. ராதிகா பேசும்போது, தனுஷ்தான் இதைப் பற்றி சொன்னார். எனக்குப் போன் செய்து அக்கா உங்களுக்கு ஏதாவது ஒரு வெக்கம் மானம் இருக்கான்னார். என்னய்யா சொல்றேன்னேன்.. என்னக்கா உங்களுக்கு எதுவுமே தெரியாதான்னார்.. யோவ் என்னய்யா நடக்குதுன்னேன்.. இந்த மாதிரி விக்கி, நயன்தாரா லவ் பண்றாங்கன்னார்.. what the hell are you saying அப்படின்னேன்.. எனக்கு நிஜமாவே ஒன்னுமே தெரியலை என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்.




இந்த டாக்குமென்டரியில் இயக்குநர்கள் அட்லி, நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பேசியுள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். நயன்தாராவின் பெற்றோரும் பேசியுள்ளனர்.


தனுஷ் ஆட்சேபித்த காட்சியுடன் இந்த டாக்குமென்டரி வெளியாகியுள்ளதால் புதிதாக ஏதாவது சர்ச்சை எழுமா, தனுஷ் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. அதேசமயம், நயன்தாராவின் அறிக்கைக்கே தனுஷ் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. தான் ஆட்சேபித்த காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியிருந்தால், சட்ட ரீதியான தனது நடவடிக்கையை மேலும் அவர் தீவிரப்படுத்தவே வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்