சென்னை: மழைக்காலம் வந்து விட்டாலே மக்களுக்கு ஒரே ஜாலிதான்.. குளுகுளுன்னு கிளைமேட்டை அனுபவிக்கலாம். ஆனால் அதை விட முக்கியம், நாம் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது.
மழைக்காலம் என்பது மகிழ்ச்சியான விஷயம் மட்டுமல்ல.. நாம் கூடுதல் கவனமாகவும் இருக்க வேண்டியதும் முக்கியம். திடீர் கன மழையால் பல பாதிப்புகளை சந்திக்க வேண்டி வருகிறது. ஒரே நேரத்தில் நீண்ட நேரம் மிக கன மழை பெய்யும்போது வெள்ளப் பெருக்கும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எனவே எல்லா வகையிலும் நாம் மழைக்காலத்தை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் மழைக்காலத்தில் நாம் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நல்லது.
மழைக்காலத்தில் நாம் செய்ய வேண்டியவை:
- சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே போடக் கூடாது. குப்பைத் தொட்டி இருந்தால் அதில் போட வேண்டும். அல்லது குப்பை வண்டியில் போட வேண்டும். குப்பைகளை தெரு முனையில் சாலையோரங்கள், கால்வாய்களில் போடுவதால் அவை அடைத்துக் கொண்டு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் நீரின் மூலமாகத்தான் பரவும். எனவே தண்ணீர சுட வைத்துக் குடிக்க வேண்டியது அவசியம். நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அந்தத் தண்ணீரை குடிப்பது நல்லது.
- மழைக்காலங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்த பின்னர், வீட்டில் நன்றாக அதைக் கழுவி சுத்தப்படுத்தி அதன் பின்னர் பயன்படுத்துவது அவசியம்.
- கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். இதுபோன்ற சமயங்களில் தொற்று நோய்கள் அதிகம் பரவும். கொரோனா காலத்தில் நாம் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போதும் கைகளை அடிக்கடிக் கழுவிக் கொள்வது நல்லது.
செய்யக் கூடாதவை:
- மழைக்காலத்தில் குப்பைகளை கண்ட இடத்தில் போடக் கூடாது.
- தண்ணீர் தேங்கிக் கிடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
- சரியாக மூடப்படாமல் சாலையோரம் விற்கப்படும் உணவுகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
- மழையில் நனைவது மகிழ்ச்சிதான்.. ஆனால் அதீதமாக நனைவதைத் தவிர்க்க வேண்டும்.
- இடி மின்னலுடன் கன மழை பெய்யும்போது வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
- மொட்டை மாடிகளில் மின்சார ஓயர்களுக்கு அருகில் வீட்டின் பால்கனி போன்றவை இருந்தால் கவனத்துடன் இருப்பது மிக மிக அவசியம்.
- கையில் ஈரத்துடன் ஸ்விட்ச்சுகளை இயக்குவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- மழைக்காலத்தில் மிகவும் பழமையான கட்டடங்களுக்குள் செல்வது, அதன் கீழே ஒதுங்கி நிற்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}