டாக்டர் தமிழிசையிடம் கடு கடுத்த முகம் காட்டிய அமித்ஷா.. கோபமா, அதிருப்தியா, எச்சரிக்கையா?

Jun 12, 2024,05:17 PM IST

விஜயவாடா:  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாற்கு வருகை தந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே கடுமையாக கண்டிப்பது போன்று பேசிய வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


டாக்டர் தமிழிசை செளந்தரராஜனை, அமித் ஷா கண்டித்தாரா அல்லது ஏதாவது சொல்லி அதிருப்தியை வெளியிட்டாரா அல்லது எதற்காவாவது எச்சரித்தாரா என்று விவாதங்கள் சூடு பறந்து கொண்டுள்ளன.




இன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழாவிற்காக, விஜயவாடா விமான நிலையம் அருகே உள்ள கேசரபல்லி என்னும்  இடத்தில் பிரம்மாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் கலந்து கொண்டார். மேடைக்கு வந்த டாக்டர் தமிழிசை அங்கு அமர்ந்திருந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோருக்கு வணக்கம் வைத்து நகர்ந்தார்.


அப்போது தமிழிசை கையைக் காட்டி அழைத்த அமித் ஷா, கடுகடுத்த முகத்துடன் அவரிடம் ஏதோ பேசினார். முதலில் புன்னகைத்த முகத்துடன் கேட்டுக் கொண்ட தமிழிசை, ஏதோ விளக்கம் சொல்வது போல கூறினார். அதை ஏற்க மறுத்த அமித்ஷா, நோ நோ என்று கூறியபடி மீண்டும் தான் சொன்னதை அவரிடம் சொன்னார். அதன் பிறகு தமிழிசை பேசவில்லை. அமைதியாக அவர் கூறியதைக் கேட்டு விட்டு நகர்ந்து சென்றார்.


இது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் தமிழிசையிடம் அமித்ஷா என்ன சொன்னார். ஏன் கோப முகத்தைக் காட்டினார். தமிழிசையிடம் அவர் ஏதாவது கோபமாக கூறினாரா அல்லது அதிருப்தியை வெளியிட்டாரா அல்லது எச்சரித்தாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்திற்கு ஒரு பிளாஷ்பேக் உள்ளது.


லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக  அதிமுக - பாஜக தலைவர்களிடையே கடும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. அண்ணாமலை ஒரு கருத்தைக் கூற எஸ்.பி.வேலுமணி இன்னொரு கருத்தைக் கூற பதிலுக்கு ஜெயக்குமார் ஒரு கருத்தைச் சொல்ல, இடையில் தமிழிசையும் சில கருத்துக்களைக் கூறினார். இதையடுத்து தமிழிசையை அண்ணாமலை ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட ஆரம்பித்தனர்.


தமிழிசையை கடுமையாக கண்டித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிவுகள் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்தும் தமிழிசை பேசியிருந்தார். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்தப் பின்னணியில்தான் டெல்லிக்கு பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தார் அண்ணாமலை. திரும்பி வந்த அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இனிமேல் வழியில் நான் செய்தியாளர்களிடம் பேச மாட்டேன். அலுவலகத்தில்தான் பேசுவேன் என்று கூறி விட்டு போய் விட்டார்.


இந்த சூழலில்தான் இன்றைய ஆந்திரா சம்பவம் நடந்துள்ளது. அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக தமிழிசையை, அமித்ஷா கண்டித்ததாகவும், இனிமேல் தமிழிசை இதுபோல பேசக் கூடாது என்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். 

 

அமித்ஷா என்ன சொன்னார் என்பதை தமிழிசையே வந்து விளக்கினால்தான் உண்டு. அதேசமயம், மூத்த தலைவர்களில் ஒருவரான, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிக முக்கியமான ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியவரும், தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற உத்வேகமான முழக்கத்தைக் கொடுத்தவருமான தமிழிசையை பொது வெளியில் வைத்து இப்படி விரல் நீட்டி கண்டிப்பது போல பேசிய செயலை பலரும் கண்டித்து எழுதி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்