கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் : தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

May 11, 2024,05:10 PM IST

சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் எனும் புதுவித காய்ச்சல் நோய் பரவி வருகிறது. தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.


வெஸ்ட் நைல் எனும் க்யூலெக்ஸ் வகை கொசுக்களிடம் இருந்து பரவுகிறது. இந்த வைரஸ்  பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை.முதன் முதலில் இந்நோய் 1937ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயினால் 2022ம் ஆண்டு ஒருவர் உயிழந்த நிலையில், தற்போது கேரளாவில் இந்நோய் பரவி வருகிறது. 


இக்காய்ச்சல் வந்தவர்களுக்கு நரம்பியல் நோய்கள் ஏற்படலாம் என்றும், நோய் தீவிரமடையும் வரை அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் கொசுக்கள் கடிப்பதனால் பரவுகிறதாம். இந்நோய் டெங்கு, சிக்கன் குனியாவை போன்று கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறதாம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். 




ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும். இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை  உடையது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதாக வருமாம். ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில்  பரவலாக காணப்படுகிறது.


இந்நிலையில், தமிழக மக்கள் கவனமுடன் இருக்க தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், வெஸ்ட் நைல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். இது, கொசுகள் மூலம் பரவுவதால் பொதுமக்கள் வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், வெஸ்ட் நைல் நோய்க்கு தடுப்பூசி இல்லை. ஆனால் முன்கூட்டியே கண்டறிந்தால் பாதிப்பிலிருந்து மீளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் குறித்து யாரும் அஞ்ச வேண்டாம் என பொது சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!

news

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!

news

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

news

என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா

news

பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்

news

அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!

news

பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிகம் பார்க்கும் செய்திகள்