வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம்... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Jun 28, 2024,01:36 PM IST

சென்னை:   வாரத்தின் இறுதி வர்த்தக தினமான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளது.


தங்கம் விலை வாரத்தின் இறுதி வர்த்தக தினமான இன்று மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த மே மாதம் 30ம் தேதி  தங்கம் விலை குறையத் தொடங்கியது. அன்று முதல் ஜூன் 3ம் தேதி வரை குறைந்திருந்த தங்கம், அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது. ஜூன் மாதம் முழுவதும் ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்து வந்தது தங்கம் விலை. இந்நிலையில், நேற்றும்  குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்தது. இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.


தங்கத்தை பொறுத்த வரை என்று குறையும் என்று உயரும் என்று கணிக்க முடியாத நிலையில், இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக இந்த விலை காணப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய காலத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடுகளை மக்கள் செய்து வருவதால், தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது.


இன்றைய தங்கம் விலை நிலவரம்...




சென்னையில் இன்றைய தங்கத்தின்  விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,666 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 41 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.328 ஆக உள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 ஆக உள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,328 ரூபாயாக உள்ளது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,272 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,176 ஆக உள்ளது. 


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.66,660 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,66,600க்கு விற்கப்படுகிறது.


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.72,720 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,27,200க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், நேற்றும் இன்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை  ரூ.94.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 756 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.945 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,450 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,500க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்