Gold Rate: அப்பாடா.. தங்கம் விலை கம்மியா இருக்கு.. !

Oct 16, 2023,11:50 AM IST
சென்னை: "தங்கம் விலை இன்று குறைந்துள்ளது" என்ற நல்ல செய்தியுடந் இந்த வாரம் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று யன்று சவரனுக்கு ரூ.360 என உயர்ந்திருந்த தங்கம் இன்று ரூ.208 குறைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அடுத்து தொடங்க உள்ள ஐப்பசியில் முகூர்த்த நாட்கள் அதிகமுள்ளதால் தங்கத்தின் விலை அதிகளவில் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



எனவே தங்க நகை வாங்குவோர் இப்போது உள்ள உயர்வு, தாழ்வு குறித்து கணக்குப் பார்க்காமல் கடைகளில் அலை மோதி வருகின்றனர். காரணம், ஐப்பசி பிறந்து விட்டால் தங்கம் விலையில் குறைவு வருவது மிக மிக கடினம் என்பதால்.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5530 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 208 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44240 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6033 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 28 ரூபாய் குறைவாகும். 

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலையே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்