இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு.. வட தமிழகத்தில்.. மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Oct 16, 2024,05:52 PM IST

சென்னை: இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து  வாங்கியது.இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த  தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி வரும் எனவும் இதனால் சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள வடகடலோர பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திரா பகுதிகளில் கரையை கடக்க உள்ளது. 


இதனால் சென்னைக்கு மழையின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை செய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.




சென்னைக்கு அருகே தாழ்வு மண்டலம்


இந்த நிலையில் நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 8:30 மணி அளவில் அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரை  பகுதியில் புதுச்சேரிக்கும்- நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 19 முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


சென்னை நிலவரம்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


இன்று மிக கனமழை முதல் அதிக கன மழை: 


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 


இன்று கனமழை முதல் மிக கனமழை :


ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம்,மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை கன முதல் மிக கனமழை:


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை: 


கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் கன மழை  (18.10.2024):


திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


19.10.24 முதல் 20.10.2024:


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 


21.10.2024 முதல் 22.10 2024:


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்