2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Feb 22, 2025,07:06 PM IST

விருத்தாச்சலம்: ரூ. 2000 கோடி அல்ல, ரூ. 10,000 கோடியே கொடுப்பதாக இருந்தாலும் சரி, புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்துப் போட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் 7வது மண்டல மாநாடு விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,க அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றத் தொடங்கும் போது நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற எம்ஜிஆர் படப் பாடலைப் பாடி தொடங்கினார். விழாவில் முதல்வர் ஆற்றிய உரையிலிருந்து:




நம்மை மத்திய அரசு, நமது பள்ளிக் கல்வித் திட்டங்களுக்காக பாராட்டியுள்ளது. என்னதான் நம்மை பாராட்டினாலும் இன்னொரு பக்கம் நிதியைத் தர மறுக்கிறார்கள். மத்திய அரசு ரூ. 2152 கோடியை தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது, 43 லட்சம் குழந்தைகளின் நலனுக்காக செலவழிக்க வேண்டிய தொகை.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று கூறி மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை, தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து. 


எந்த மொழிக்கும் நாம் தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை. எந்த மொழியை திணித்தாலும் எப்பவும் நாங்கள் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம். இந்தியைத் திணிக்கிறாங்கன்ற காரணத்திற்காக மட்டுமே தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை அரசுப் பள்ளிகளிலிருந்து விரட்டும் கொள்கை இது. துரத்தும் கொள்கை இது. பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதை உணர்த்தியுள்ளோம். மத்திய அரசின் கொள்கையால் என்னவெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா.


- சமூக நீதிக் கொள்கையை நீர்த்துப் போச் செய்து விடும்.

- பட்டியல் இன பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவித் தொகை தருகிறோம். அதை மத்திய அரசு திட்டம் மறுக்கிறது.

- 3ம் வகுப்பு பிறகு 5ம் வகுப்பு, அதைத் தொடர்ந்து 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு வைத்து பிள்ளைகளை வடி கட்டப் பார்க்கிறார்கள். 

- 9ம் வகுப்பு முதல் 12 வரை செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

- உங்கள் மகனோ, மகளோ 12ம் வகுப்பை முடித்து விட்டு விரும்பிய கல்லூரியில் சேர முடியாது. மருத்துவக் கல்லூரிக்கு நீட் போல, பொறியியல் ஆர்ட்ஸ் காலேஜுக்கும் தேர்வு வைத்துததான் எடுப்பார்கள். தேசிய அளவில்தான் நடக்கும்.




இதை விடக் கொடுமை 10 முதல் பட்டப் பிடிப்பு வரை தொடர விரும்பாதவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்று இந்தக் கொள்கை சொல்கிறது. இது, படிக்காமல் போ என்று சொல்வதற்கு சமமா, இல்லையா. 6ம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்ற பெயரில் குலக் கல்வியை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். மனு நீதி சொன்ன குலக் கல்விக்கு நமது பிள்ளைகளைத் தள்ளப் பார்க்கிறார்கள். இதனால்தான் உறுதியாக சொல்கிறோம், இதை ஏற்க மாட்டோம் என்று. 


திட்டத்தில் கையழுத்துப் போட்டால்தான் 2000 கோடி கிடைக்கும். 10,000 கோடி கொடுத்தாலும் கையெழுத்துப் போட மாட்டோம். 2000 கோடிக்காக கையழுத்துப் போட்டால் என்னாகும்.. 2000 ஆண்டு பின்னோக்கி தமிழ்ச் சமுதாயம் போய் விடும். அந்தப் பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு போதும் செய்ய மாட்டேன். 


நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல, இந்திக்கும் எதிரி அல்ல. யார் விரும்பினாலும் இந்தி பிரச்சார சபாவுக்குப் போய்  தாராளமாக படிக்கட்டும். கேவி பள்ளிகளிலோ படிக்கலாம். ஒரு போதும் தடுத்தது இல்லை. தடுக்கப் போவதும் இல்லை. திணிக்க நினைக்காதீங்க. நினைத்தால், தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவருக்கு ஒரு குணம் உண்டு என்பதை காட்டி விடுவோம்.


மத்திய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களுமே ஏற்றுள்ளதே . ஏன் தமிழ்நாடு ஏற்கவில்லை என்று கேட்கிறார். இது தமிழ்நாடு. உயர் தனி செம்மொழி தமிழை தாய்மழியாகக் கொண்டர்கள் தமிழர்கள். உயிரை விட மொழியை அதிகமாக மதிப்பவர்கள் நாங்கள். எங்களை ஆதிக்கம் செலுத்த நினைத்தால் ஏற்க மாட்டாோம்.




குடியரசு துணைத் தலைவர் சொல்லியுள்ளார். ஒரு நிலத்தைக் கைப்பற்ற கலாச்சாரத்தையும், மொழியையும் அழிப்பதே சிறந்த வழி என்று சொல்லியுள்ளார். பழைய வரலாற்றை அவர் சொன்னாலும், தமிழ்நாட்டின் புதிய வரலாறாக, கொடிய வரலாறாக மாறி விடக் கூடாது என்பதற்காகவே போராடி வருகிறோம். 52 மொழிகள் அழிவின் விளிம்புக்குப் போய் விட்டன. இந்தி பெல்ட்டில் 25 மொழிகள் அழிந்து விட்டன. இப்போதுதான் அந்த மாநிலங்களில் மெல்ல மெல்ல விழிப்புணர்வு அடைந்து வருகிறது. அதுக்கும் தமிழ்நாடு தமிழை தற்காத்துக் கொண்டதுதான் காரணம். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, இப்போது ஒவ்வொரு மொழியைக் காக்கும் கொள்கையாக மாறிட்டிருக்கு.


நிதியைக் கொடுங்கன்னு கேட்டா தமிழ் மீது அக்கறை கொண்டிருப்பதாக சொல்கிறார் கல்வி அமைச்சர். அந்த அக்கறை தமிழுக்கு என்ன செய்திருக்கு. ஒரு சின்ன சாம்பிள் சொல்கிறேன். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 1488 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியிருக்கு. அந்த மொழியை  சில ஆயிரம் பேர்தான் பேசுகிறார்கள்.  8 கோடி பேர் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாய்தான். இதுதான் தமிழைக் கவனிக்கிற லட்சணமா.  மத்திய அரசு வழங்காவிட்டாலும் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்நது செயல்படுத்துவோம். அது உறுதி என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்