RIP Vijayakanth.. நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டிய தலைவர்.. இழந்துட்டோம்.. நெப்போலியன் வேதனை

Dec 28, 2023,02:25 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு திரை உலகமே சோகக் கடலில் மூழ்கியுள்ள தருணத்தில், பல்வேறு பிரபலங்கள் தங்களின்  இரங்கல்களை செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.


கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்களும், கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தங்களின் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். அவருடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான நடிகர் நெப்போலியன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


நல்ல தலைவரை இழந்துட்டோம் - நடிகர் நெப்போலியன் 




இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கும் நிறைய செய்ய வேண்டிய ஒரு நல்ல நடிகரையும் ,ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்து விட்டோம்..!


அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என , எண்ணில் அடங்காத செயல்களை எல்லாம், அவருடன், நண்பர் சரத்குமார் அவர்களும், நானும் உடனிருந்து கடினமாக உழைத்து வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் ,எங்களால் என்றும் எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது..!


கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தபோது, அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல்நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது, இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல் இருக்கிறது..! வாழ்வின் மறக்க முடியாத நல்ல மனிதர்..!


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும்,, உற்றார் உறவினர்களுக்கும்,

மற்றும் அவரது ரசிகர்களுக்கும்,  தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.. எனக் கூறினார்.


விஜயகாந்த் மறைவு குறித்து ஒய் .ஜி மகேந்திரன்


திரை உலகில் மீண்டும் ஒரு மலை சாய்ந்தது. விஜயகாந்த் என்னும் உச்சத்தை தொட்ட மலை. இதயம் உள்ள மலை. கேப்டன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஒரு நல்ல நடிகர். மக்களிடையே செல்வாக்கு பெற்ற  நடிகர் விஜயகாந்த் மறைந்துவிட்டார். எனக்கு அவருடன் அதிகமாக தொடர்பு கிடையாது. ஏனென்றால் அவருடன் இணைந்து நடித்த படங்கள் மூன்று, நான்கு படங்கள் தான் அதிலும் எஸ் ஏ சந்திரசேகர் ஐயா தான் உபயம்.


அந்த மூன்று, நான்கு படங்களிலும் அவருடன் நான் பழகிய விதம் நேருக்கு நேர் பேசக்கூடிய மனிதர். வாயால் பேசக்கூடியவர் அல்ல .இதயத்தால் பேசக்கூடியவர் என்பது அவரிடம் இருந்து புரிந்து கொண்டேன். அவரைப் பற்றி சேகரித்த விஷயங்களை கேள்விப்படும்போது அவரைப் போல் அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள் இந்த திரைப்பட உலகில் மிகக் குறைவு தான் என தெரிந்தது. எத்தனை பேருக்கு கல்வி உதவி ஆனாலும் எதற்குமே அவர் பெயர் வாங்கினது இல்லை. அதற்கு அவர் பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்று  ஆசைப்பட்டதில்லை.


நல்ல மனிதர். அவர் இந்த சினிமா உலகத்தில் இல்லை என்று நினைக்கும் போது கண்டிப்பாக ஏதோ ஒரு தூண் சாய்ந்ததாகதான் தோன்றுகிறது. எத்தனையோ இன்னல்களை அவர் சந்தித்தார். அரசியலில் அவர் சந்தித்த எதிர்ப்புகள் எல்லாத்தையும் மீறியும் கட்சியில் என்னா செல்வாக்கோடு இருந்தார் இன்றும் மக்கள் மனதில். தமிழ் சினிமா வரலாற்றில் கண்டிப்பாக பேசப்படும் மனிதராகதான் விளங்குவார். 


அவர் குடும்பத்துக்கும், மனைவிக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல். இந்த உலகத்தை விட்டு ஒரு நல்ல மனிதர் பிரிந்து விட்டாரே என்பது கவலையாக இருக்குமே தவிர .அவருக்கு அது ரிலீஃப்பாக தான் இருக்கும் அவருடைய உடல் உபாதைகளை நினைக்கும்போது. 71 வருடம் இருந்தார் .தன்னுடைய காலை ஆழமாக பதித்தார் சினிமா உலகத்தின் மணலிலே. கேப்டன் யூ சல்யூட் என்று கூறியுள்ளார்.


இயக்குநர் சுசீந்திரன் அஞ்சலி




ரொம்ப அதிர்ச்சியா இருக்கு ..ரொம்ப வேதனையா இருக்கு.. விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு. சின்ன வயதில் இருந்தே நான் சாருடைய மிகப்பெரிய  ரசிகர். படிக்கும்போது முதல் ஷோ பார்க்க வேண்டும் என எத்தனையோ நாட்கள் பள்ளியை கட்டடித்து படத்துக்கு செல்வேன் அவருடைய படம் பார்க்க மட்டும். இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தார்கள், அவருடைய ரசிகர்கள், அவருடைய தொண்டர்கள், என அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்களை சொல்லிக் கொள்கிறேன். 


விஜயகாந்த் சார் நம்மை விட்டுப் போனாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் இன்னும் பல நூற்றாண்டு காலம் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்