கொல்கத்தா: மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. தனித்தே போட்டியிடுவோம். எங்களால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு முழுவதும் ஒரே கூட்டணியாக போட்டியிடும் இந்தியா கூட்டணியின் எண்ணத்திற்கும், திட்டத்திற்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் திமுகவைத் தவிர பிற முக்கியக் கட்சிகளாக உள்ளவை திரினமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை. இதில் திமுக எந்த அளவுக்கு இணக்கமாக போகிறதோ அதற்கு நேர் எதிராக திரினமூல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி ஆகியவை செயல்படுகின்றன.
இதில் திரினமூல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் எங்களுக்கு யாருமே தேவையில்லை. நாங்களே பாஜகவை வீழ்த்திக்குவோம்.. தனித்தே போட்டியிடுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே கூட்டணியாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால்தான் வாக்குகளை சிதறாமல், பாஜகவுக்கு எதிராக திரட்ட முடியும் என்று காங்கிரஸும், திமுகவும் கருதுகின்றன. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக மமதா பானர்ஜி செயல்படுவது கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மமதா சொல்வதைப் பார்த்தால், கூட்டணிக் கூட்டங்களில் சும்மா ஒப்புக்கு வந்து கலந்து கொள்வேன்.. ஆனால் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுவேன் என்று சொல்வது போல உள்ளது. இதற்கு எதற்காக அவர் கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற கேள்வியை சில தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் மமதா பானர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. நான் எப்போதுமே சொல்லி வருவது என்னவென்றால், நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நாங்கள் மதச்சார்பற்ற கட்சியாக இருக்கிறோம். இங்கு நாங்கள் தனித்தே பாஜகவை வீழ்த்துவோம்.
ராகுல் யாத்திரை குறித்து எனக்கு சொல்லலியே!
நான் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். ஆனால் மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோதோ நியாய யாத்திரை குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றார் மமதா பானர்ஜி.
கூட்டணி வேண்டாம் என்றும் சொல்கிறார்.. கூடவே, கூட்டணியில் இருக்கிறேன்.. ஆனால் எங்களுக்கு ராகுல் காந்தி யாத்திரை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றும் அலுத்துக் கொள்கிறார்.. ஏன் இப்படி மமதா பானர்ஜி குறுக்கு சால் ஓட்டுகிறார் என்று புரியாமல் கூட்டணிக் கட்சியினர் குழம்பிப் போயுள்ளனர்.
மமதா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரினமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}