திமுக கூட்டணிக்கு 40க்கு 40.. இது பாஜக.விற்கு நாங்க வச்ச செக்.. சொல்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்

Jun 09, 2024,10:28 PM IST

சென்னை : பாஜக.,விற்கு நாங்க தேர்தல் மூலம் செக் வைத்துள்ளோம் என திமுக.,வின் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.


நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், தமிழக லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் தான் எங்களின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.




லோக்சபா தேர்தல் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க நினைத்த பாஜக.,விற்கு நாங்கள் செக் வைத்துள்ளோம். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவின் பன்முகத்தன்மையான ஒரே நாடு ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அரசியல் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகத் திருத்த முயற்சிக்கும் பாஜகவுக்கு இது செக். 


இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது. அந்த பன்முகத்தன்மையை ஒழித்து, பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது பாஜக. நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.


மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. திமுக கூட்டக் கட்சிகளான காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியன தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அளவிலும் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்