இது என் அண்ணன் குடும்பப் பிரச்சினை.. எனக்கு சம்பந்தம் இல்லை.. குமாரசாமி அதிரடி பேட்டி!

Apr 29, 2024,06:59 PM IST

பெங்களூரு:  பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ குறித்த விவகாரத்தில் எங்களது பெயர்களை ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ரேவண்ணா குடும்பப் பிரச்சினை. இதில் எங்களுக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரம், பிரஜ்வால் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான எச். டி.குமாரசாமி கூறியுள்ளார்.


ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளரான பிரஜ்வால் ரேவண்ணா, பெண்களை தவறாகப் பயன்படுத்தி ஆபாச கோலத்தில் வீடியோ எடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர் ஜெர்மனிக்குத் தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.




இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரஜ்வாலின் சித்தப்பாவான குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,  பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டது யார்.. தேர்தலுக்கு முன்பு அதை வெளியிட்டது யார்.. அப்படி வெளியிட என்ன காரணம்.. பழைய விவகாரத்தை தேர்தல் சமயத்தில் கிளற என்ன காரணம். எஸ்ஐடி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கட்டும், உண்மை வெளி வரட்டும். தவறு செய்தவர்கள் சட்டப்படியான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.


ஹசன் தேர்தலில் எங்களது வேட்பாளர் (பிரஜ்வால் ரேவண்ணா) வெற்றி பெறுவார். இதை நான் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள்.


நான் காங்கிரஸ் காரர்களைப் பார்த்துக் கேட்பது, எதற்காக இந்த விவகாரத்தில் குடும்பப் பெயரை இழுக்கறீர்கள். இது ஒரு குடும்பப் பிரச்சினை கிடையாது. தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டது.  இதில் எங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. இது ரேவண்ணா குடும்பத்தின் பிரச்சினை. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தனியாக வசிக்கிறார்கள் என்றார் குமாரசாமி.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்