டெல்லி: வயநாடு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல் மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள 400 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அப்பகுதி மக்கள் உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வயநாடு பூமியே கண்ணீர் பூமியாக மாறி உள்ளது. இதனைக் கேட்போரும் காண்போரும் கண் கலங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட விரைவில் வயநாடு வருவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது. ஏனெனில் கடந்த இரண்டு தினங்களாக மோசமான வானிலை நிலவி வந்ததால் அங்கு விமானம் தரையிறக்க முடியாமல் சிக்கல் நீடித்தது.இதனால் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் படிப்படியாக மழையின் அளவு குறைந்து வானிலை சீராகி வருகிறது. இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பி யுமான ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று டில்லியிலிருந்து வயநாடு புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் அளிக்க இருக்கிறார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் வயநாடு வந்து மக்களை சந்தித்து அப்பகுதிகளை பார்வையிட வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}